There were 482 press releases posted in the last 24 hours and 186,282 in the last 365 days.

மாவை வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர?.

NEW YORK, NEW YORK, USA, June 26, 2018 /EINPresswire.com/ -- தமிழர்களின் துன்பத்தை சர்வதேச இராஜதந்திரிகளுக்கு துணிகரமாகவும் எளிதாகவும் மற்றும் புரிந்துகொள்ளக்கூடியதுமாக கூறிவருபவராக ஒருவர் மட்டுமே தமிழ் அரசியலில் தற்போது உள்ளார். அவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனே. தமிழர்கள் அவரை அரசியலில் இருந்து இழக்க விரும்பவில்லை.

அவரையும் தமிழர் அரசியில் இருந்து துரத்திவிடால், எல்லா எலிகளுக்கும் கொண்டாட்டமாய் போய்விடும்-பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம்.

எனவே, மாவை தனது முதலமைச்சர் கனவை மறந்து விட்டு, மீண்டும் விக்கினேஸ்வரனே முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு கொடுப்பது தான் தமிழினத்துக்கு செய்யக்கூடிய மாபெரும் உதவியாகும். மாவை இப்போது செய்யக்கூடிய ஒரே நல்ல விஷயம் இதுதான். இது மாவை இதுவரை ஏதாவது தமிழர்க்கு செய்திருந்தால் அதை விட பெரியது விக்னேஸ்வரனுக்கு ஆதரவு கொடுப்பதுதான்.

மாவை தானாக யோசிக்கும் தன்மை அற்றவர், இவருக்கு யாரும் புத்தி சொன்னால் தான் ஏதாவது செய்யக்கூடியவர் ( a follower ). இவருக்கு தலைமை தத்துவம் இல்லை.

சிறுவயதில் மாவை குறிகிய காலம் சிறைக்குச் சென்றார், அவர் சிறையில் இருந்து வெளியேறிய பின்னர் போராளி தலைவராக வர இல்லை.

முதலில், 2015 ஜனாதிபதி தேர்தலில் யாரிடம் இருந்து மாவை பணம் பெற்றார் என்று கூறவேண்டும். மாவை கிளிநொச்சி எம்.பி., வவுனியா எம்.பி., மற்றும் ஏனைய பலருக்கு மாவை தலா 25 மில்லியன் ரூபாவை படி வழங்கினார் .

இந்த பணத்தினை யார் கொடுத்தது. சுமந்திரன், சம்பந்தன் ஊடாக மைத்திரியா அல்லது வெளிநாட்டு அரசாங்கமா?
என்பதை மாவை சொல்ல வேண்டும்.
இந்த பணத்தை பெறுவதற்கு எதை TNA எந்த கொள்கை விட்டுக்கொடுப்புகளை செய்தது:

1. வட-கிழக்கு இணைப்பு தேவை இல்லை என்பதனையா
2. தமிழர்களுக்கு கூட்டாட்சி தேவை இல்லை என்பதனையா
3. புத்தமதத்திற்கு முதன்மையான இடம் என்பதனையா
4. வடக்கில் சிங்கள குடியமர்த்துவதற்கு சம்மதிப்பது என்பதனையா
5. வடக்கில் புத்த விகராயை கட்டியெழுப்ப சம்மதிப்பது என்பதனையா
6. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் TNA க்கு பெரும்பான்மை கிடைத்தால், கிழக்கு மாகாண சபையை தமிழர் ஆள விடாமல் முஸ்லீம்களுக்கு விட்டு கொடுப்பது என்பதனையா
7. சர்வதேச போற்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது என்பதனையா

என்பதற்கு மாவை தமிழர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டும்.
அல்லது போனால் எதுவும் புரியாமல் சுமந்திரனுக்கு மாவை தண்ணீர் காவினரா?

மாவை முழுமையாக சுமந்திரனின் சொல்லை தான் கேட்பவர். உதாரணமாக, யாழ்ப்பாண மேயர் வேட்பாளர் ரெனோல்ட் மாவையால் அல்ல சுமந்திரனினால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையை சுமந்திரன் குழப்பிய போது, தமிழரசு கட்சி தலைவர் மாவை அமைதியாக சுமந்திரனின் அழுக்கு வேலையை நிறுத்துவதற்கு பதிலாக ஆதரவு அளித்தார்.

மாவை ரணிலுக்கு மிகவும் நெருங்கியவர். ரணில் ஒரு குள்ளநரி. ரணிலினுடன் நட்புள்ள மாவையின் தலைமை கேள்விகுரியது.

மாவைப் பற்றி மிகவும் வருந்ததக்க விடையம் என்னவெனில் நாவற்குழியில் சிங்கள குடியேற்றத்தை அதிகாரப்பூர்வமாக தமிழரசு கட்சி சார்பாக அனுமதித்தவர்.

நெடுங்கேணியில் சிங்கள மயமாக்கலுக்கான விசேட காணி உறுதியை சிங்களவர்களுக்கு வழங்கும் வைபவத்தில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டனர். ரணில் மைத்திரி ஆகியோர் இந்த நிகழ்விற்கு பிரதான விருந்தாளியாக இருந்தார்கள். தமிழ் பெருபான்மையான கட்சி தலைவர் மாவை அமைதியாக இருந்தார். ஏனெனில் ரணிலினதும் மைத்திரியினதும் மனங்களை நோகடித்து விடக்கூடாததே காரணமாகும்.

தமிழ் அரசு கட்சியில் எவரும் எப்போதும் இணைந்து, வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சியை ஆதரிக்கவில்லை. சுமந்திரன் தனது மந்திர வார்த்தை "எக்க்கியியா ராஜ்யத்தை" கொண்டு வந்தபோது, மாவை உட்பட இந்த அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாக இருந்தனர்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் ஒவ்வொரு விடயத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் மாவை உட்பட TNA எம்.பிகள் அனைவரும் அமைதியாக இருகின்றார்கள்.

ஆகவே மாவை விக்னேஸ்வரனுக்கு ஆதரவு கொடுத்து, வட மாகாண அரசியலலிருந்து விலகி, வட மாகாண அரசியலை விக்கினேஸ்வரனிடம் விட்டுவிடுவதே சிறந்தது.

Thank you,

Tamil Diaspora News
(http://www.Tamildiasporanews.com)

Editor
Tamil Diaspora News
914 713 4440
email us here