There were 1,884 press releases posted in the last 24 hours and 399,370 in the last 365 days.

ஐ.நா.வில் சிறிலங்கா எதிர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள்

"இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது"

UNITED NATIONS HUMAN RIGHTS COUNCIL, GENEVA, SWITZERLAND, September 12, 2022 /EINPresswire.com/ --

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார். https://youtu.be/etcPR8Nszs8

இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 51 கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையின் போதே இந்நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி தனதுரையில்,

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை இதுவரை தீர்க்கமாக அணுகுமுறையில் செயல்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலை சிறிலங்காவை பொறுப்புக் கூற வேண்டும்

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் சிறிலங்கா எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. செயற்படுத்துவதற்கான விருப்பத்தையே,நடைமுறைப்படுத்துவதற்கான சரியான திசையோ காட்டியிருக்கவில்லை.

போரின் போது படுகொலைக்கும், வலிந்தும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நீதி தேடும் தமிழர்கள் தேடும் முயற்சியில் விரக்தியும் மட்டும் அடையவில்லை தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விரக்தி அடைந்துள்ளனர்.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகளுடன் பாதுகாப்புடன் தொடர்ந்து அபகரித்தும், சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மேலும் மேலும் காலஅவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு சபையினைக் கேட்டுக்கொள்வதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டரைமக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுகிறோம். தாமதிக்கப்படட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என தெரிவித்திருந்தார்.

TGTE Human Rights Minister's Speech at UN Human Rights Council Calling to Refer Sri Lanka to Int'l Criminal Court (ICC)
https://www.einpresswire.com/article/590504565/tgte-human-rights-minister-s-speech-at-un-human-rights-council-calling-to-refer-sri-lanka-to-int-l-criminal-court-icc

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி *
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org