There were 1,829 press releases posted in the last 24 hours and 399,370 in the last 365 days.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு 2 லட்சம் வாக்குகள், தமிழர்களுக்கான எதிர்காலம் முழுவதையும் மாற்றும்.

அரசியல் விளம்பரங்கள் யாழ்ப்பாண ஆவணங்களிலும் சுவர்களிலும் மிகவும் அதிகமா உள்ளவை

NEW YORK, NEW YORK, USA, November 13, 2019 /EINPresswire.com/ -- தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு 2 லட்சம் வாக்குகள், தமிழர்களுக்கான எதிர்காலம் முழுவதையும் மாற்றும்.

அன்புள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் உறவினர்களே,

இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் தொலை பேசியில் அழைத்து தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்.

நீங்கள் வடகிழக்கில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் தேர்தல் சாவடிக்கு அழைத்துச் சென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க அவர்களுக்கு உதவுங்கள்.

இந்தத் தேர்தலில், தமிழ் வேட்பாளர் 2 லட்சம் வாக்குகளைப் பெற்றால், அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா யாவும் சிறிலங்கா பற்றிய தமது அரசியலின் முழு சிந்தனையையும் மாற்றிவிடும்.

போருக்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு 2 லட்சம் வாக்குகள், சிறிலங்கா அரசியலை தமிழர்கள் நிராகரிப்பதைக் காட்டுகிறது. சிங்கள அரசியல் தலைவர்களின் கீழ் தமிழர்கள் வாழ விரும்புவதில்லை என்பதையும், சிங்கள ஆட்சியில் தமிழர்கள் வெறுப்பு கொண்டுள்ளதையும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா வுக்கு எடுத்துரைக்கும்.

எமது விடிவு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவில் தான் தங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாம் எதைக்கூறுகிறது ? தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிற முன்னாள் ஒட்டு குழுக்களால் கட்டமைக்க உதவிய சிங்கள அரசியல் பொறியில் இருந்து தமிழர்கள் வெளியேற விரும்புகிறார்கள்.

இவையெல்லாம் தமிழர்கள் நிரந்தர பாதுகாப்பையும் சுய ஆட்சியையும் கொண்டிருக்க விரும்புகிறார்கள் என்பதாகும்.

குறைந்தபட்சம், தமிழ் வேட்பாளர் வெற்றியின் விளிம்பை எதிர்கொள்ள தேவையான வாக்குகளை பெற்றால் அது
தமிழர்களிடமிருந்து உலகிற்கு வலுவான அறிக்கையாக இருக்கும்.

தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள், மீன் சின்னம்.

நன்றி,

புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
www.Tamildiasporanews.com

Editor
Tamil Diaspora News
+1 914-980-1811
email us here