எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை தயவுசெய்து கேட்க வேண்டாம்.
கூட்டமைப்பின் நடவடிக்கைளை உற்று நோக்கும் போது, நாம் வடக்கில் சிறுபான்மையினராகவும் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மாறுவோம் போல் தெரிகிறது.
NEW YORK, NEW YORK, USA, November 12, 2019 /EINPresswire.com/ -- நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்ப வேண்டுமா? இல்லை.
தயவுசெய்து பின்வருவனவற்றைப் படித்து நீங்களே முடிவெடுங்கள்
எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை தயவுசெய்து கேட்க வேண்டாம்.
தமிழர்களாகிய நாங்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் சுயராஜ்யத்தை விரும்புகிறார்கள் என்பதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது.
கூட்டமைப்பு தமிழர்களை பல வழிகளில் ஏமாற்றிவிட்டது. ஜனாதிபதி தேர்தல் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சொல்லை கேட்பதற்கு முன், இவர்கள் தமிழர்களுக்காகவோ அல்லது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகிறதா என்று நாம் கேட்க வேண்டும்.
1. கூட்டமைப்பு இந்தியாவின் 13 பிளஸ் திருத்த சட்டத்தினை ஏன் கைவிட்டது?
நாங்கள் இந்திய மற்றும் சர்வதேச ஈடுபாட்டை இழந்தோம், வடக்கு மற்றும் கிழக்கை தமிழர்களின் தாயகம் என்று அங்கீகரிக்கும் 13 வது திருத்தத்தை இழந்தோம். அது இப்போது தமிழரை மேலும் பாதிக்கக்கூடியதாக ஆக்கியது.
2. புத்த மதத்தை முதன்மையான இடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது, இந்து மற்றும் தமிழ் கிறிஸ்தவர்களை அவமதிப்பதாகும். நீராவியடி பிள்ளையர் கோயில் மற்றும் திருகோணமலை வெந்நீர் கிணற்று போராட்டங்கள் புத்தமதத்திற்கு முதன்மையான இடத்திற்கு கூட்டமைப்பு ஆம் என்ற பிறகு நடந்தது.
3. சம்பந்தர் புதுடெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியிடம் இலங்கை புத்த நாடு என்று கூறினார். சமபந்தன் இதை ஏன் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. குறைந்த பட்சம் அவர் தமிழ் இந்துக்களின் வரலாற்றைப்பற்றி பொய் சொல்லக்கூடாது.
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக இலங்கைக்கு கொண்டு வந்தது. விசாரணையை நடை முறை படுத்தாமல் இருப்பதற்கு இலங்கைக்கு விசாரணையை ஒத்திவைக்க 4 ஆண்டுகள் (2 முறை) நீட்டிப்பு வழங்க கூட்டமைப்பு உதவியது. இது போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ர்களுக்கு பெரும் ஏமாற்றமும் அவமானமும் ஆகும்.
5. புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் கேட்டது? முதலில் இந்தியாவின் பங்களிப்பிலிருந்து விடுபடவும், இரண்டாவதாக, தமிழ் தாய்நாடு மற்றும் தமிழ் இனம்கருத்திலிருந்து விடுபடவும் ஆகும்.
6. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, சிங்கள கட்சிகள் பிளவு பட்ட பின்னர், 11 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்யானது. சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கை ஆள ஆதரவு கொடுத்தது. தமிழர்களுக்கு முதலமைச்சராக இருக்க தகுதியான நபர் இல்லை என்று சுமந்திரன் ஒரு முறை கூறியிருந்தார், பின்னர் மற்ற சந்தர்ப்பங்களில், நல்லிணக்கத்தின் கீழ், கிழக்கு மாகாண சபையை முஸ்லிம்களைக் கைப்பற்ற அனுமதித்தோம் என்று சுமந்திரன் கூறியிருந்தார். இது கிழக்கில் உள்ள தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற நிலையை உருவாக்கியது. இதை நாங்கள் பல வழிகளில் காணக்கூடியதாகவுள்ளது.
7. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொழும்பிலும் விடுதலைப்புலிகள் இரக்கமற்ற பயங்கரவாதி என்று சம்பந்தனும் சுமந்திரனும் விமர்சித்து வந்தனர். தற்போது அவர்கள் விடுதலைப்புலிகளைப் பற்றி அதிகம் நன்றாக கூறுகிறார்கள். இது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற தமிழர்களை முட்டாளாக்குவது தான்.
தமிழர்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேலை செய்யவில்லை என்பதையும், கூட்டமைப்பு முஸ்லிம்ஸ் மற்றும் சிங்களவர்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் மேற்கண்ட முக்கியமான உண்மைகள் காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களிடம் பொய் சொன்னார்கள். பாராளுமன்றத் தேர்தலின் போது, கூட்டமைப்பு வடகிழக்கு ஒன்றிணைந்த கூட்டாட்சி தமது குறிக்கோள் என்று கூறியது, ஆனால் அவர்கள் ஒருபோதும் அரசியலமைப்பு சபையின் அங்கமாக இருந்தபோதிலும், அரசியலமைப்பு சபையிலிருந்து வடகிழக்கு இணைப்பு அல்லது கூட்டாட்சிக்காக குரல் கொடுக்கவுமில்லை. கேட்கவுமில்லை.
இப்போது நாம் கூட்டமைப்பை க கேட்க வேண்டும். அவர்கள் 2015 இல் நிபந்தனைகள் இல்லாமல் சிரிசேனாவை ஆதரித்தனர். ஜனாதிபதி சிரிசேனாவிடம் இருந்து எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் தமிழர்கள் முன்பை விட சிறிசேனாவின் கீழ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிரிசேனா தனது இறந்த உடலின் மீது கூட, தமிழர்களுக்கு ஒருபோதும் வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சி கொடுக்க தயாரில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைளை உற்று நோக்கும் போது, அவர்கள் சலுகைகள் மற்றும் சிங்களவர்களிடமிருந்து சில பதவிகளில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை நாங்கள் ஊகிக்க முடிகிறது. இவற்றைக் எல்லாம் பார்த்தால், நாம் வடக்கில் சிறுபான்மையினராகவும் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மாறுவோம் போல் தெரிகிறது.
கிழக்கை பிறப்பிடமாக கொண்ட சம்பந்தன் கூட, கிழக்கு தமிழர்களைப் பற்றி கவலைப்படவேயில்லை, ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா, ஏனென்றால் வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கில் அதிக வாக்கு வங்கி இல்லை என்பதனால்தான் ஆகும்.
சிங்களவர்களால் வழங்கப்படும் சலுகைகளை அனுபவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தில் இருக்க வேண்டும். இதனால் தான் கிழக்கை விட்டுவிட்டு அதிக அளவில் வடக்குக்கு கூட்டமைப்பு வருகிறது.
அன்பான தமிழ்ச் சொந்தங்களே!!!
நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வதெல்லாம், தயவுசெய்து உங்கள் வாக்குகளை ஒரு தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
தமிழ் வாக்காளரின் சின்னமான “மீன்” சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
நன்றி,
ஆசிரியர் குழு,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்.
Editor
Tamil Diaspora News
+1 914-980-1811
email us here
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.



