There were 573 press releases posted in the last 24 hours and 440,636 in the last 365 days.

What is Federalism? சமஷ்டி என்றால் என்ன?

Real Federalism

NEW YORK, NEW YORK, USA, September 14, 2018 /EINPresswire.com/ -- சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி.

சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன?

தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி பாதுகாக்கப்படும்.

மாநிலத்தின் இறையாண்மை என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளும், சொத்துடமைகளும் முழுமையாக மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற கருத்தாகும்.

சமஸ்டி அல்லது கூட்டாச்சி, போரிடும் இனவாத குழுக்களை தனித்தனியாக ஒரு நாட்டில் வைத்திருப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் பிரிவினை தவிர்க்கும் என்பது சமஸ்டியின் தத்துவம்.

இந்த சமஷ்டி (கூட்டாட்சி)யினால் என்ன நன்மை?
கொடுங்கோன்மையிலிருந்து நம்மை காப்பாற்றுவது, மற்ற இனங்களின் அல்லது பெருபான்மை இனத்தின் அதிகாரத்தை குறைப்பது அல்லது சிதறியடிப்பது, குடிமக்கள் பங்களிப்பு அதிகரிப்பது. மற்றும் கூட்டாட்சி சமாதானத்தை ஏற்படுத்துகிறது அல்லது அதிகரிக்கும் எனலாம். ஒரு கூட்டாட்சி முறையானது சமாதானத்தைக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் இது ஒப்புதல் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

குறிப்பு :"தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்த ஆகியவற்லிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழரின் தேவை. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக போராடினார்."

இனவழி அல்லது கலாச்சார பிளவுகளால் பிரிக்கப்பட்டுள்ள மக்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கு மத்தியில் சுவாரஸ்யமான தீர்வுகளாகக் காணும் ஒரு அரசியல் ஒழுங்ககே சமஸ்டி அல்லது கூட்டாச்சி. கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா, ஈராக், நேபாளம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் வைத்துக்கொண்டு சமஸ்டி ஏற்பாடு விரும்பத்தக்க அமைதியான ஒரு விளைவை உண்டு பண்ணியுள்ளது.

இந்த சமஷ்டி அமைப்பு நாட்டின் சிக்கல்களில் பலவற்றை தீர்க்க முடியும். ஒவ்வொரு இனமும் தன்னாட்சி கொண்ட ஒரு குறிப்பிட்ட பகுதிக்கில் அல்லது மாநிலத்தில் வாழமுடியும். இவ்விதத்தில் ஒவ்வொரு இனமும் மகிழ்ச்சியாகவு, பயமற்றும் இருக்முடியும். இதனால் , இவ்வினங்கள் விரைவான பொருளாதார, தொழில்துறை, கல்வி போன்ற பலவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.

இம்முறையில், உதாரணமாக போஸ்னியாவில் நடந்தது போல், இனஅழிப்பை உண்டு பண்ணிய சேர்பியர்கள், சமாதானத்தை விரும்பி, தமது சொந்த இடங்களுக்கு சென்றது போல், சிங்களவர்களும் வட கிழக்கை விட்டு தமது சிங்கள நாட்டில் உள்ள வீட்டிடங்களுக்கு திரும்பி செல்வார்கள்.

குறிப்பு: மத்திய அரசாங்கத்தின் பொறுப்புகள் மாநிலங்களால் அல்லது மாகாணங்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன. மாநிலங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே, எந்தவொரு சட்டத்தையும் அமுல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.

சமஷ்டியின் தத்துவத்தின் படி (கொழும்பில் உள்ள) மத்திய அரசாங்கத்தின் பொறுப்புகள்:

1. வெளியுறவு கொள்கை.
2. வெளிநாட்டு வர்த்தக கொள்கை.
3. சுங்க கொள்கை.
4. பணவியல் கொள்கை
5. மாநிலங்களுக்கு இடையேயானா போக்குவரத்து ஒழுங்குமுறை
6. தேசிய பாதுகாப்பு - வெளிநாட்டு படையெடுப்பினை அல்லது வெளிநாட்டவரின் போர் தொடுப்பிலிருந்து பாதுகாப்பத்திற்கு .
சமஷ்டியின் தத்துவத்தின் படி, மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் (தமிழ் சிங்கள மாநிலங்களின் அதிகாரங்கள் அல்லது உரிமைகள்):

"மத்திய அரசின் பொறுப்புகள்அல்லது அதிகாரங்கள்" மேலே பட்டியலிடப்பட்டுள்ள 6 பொருட்கள் தவிர, மாநில அரசு எல்லா அதிகாரத்தையும் கொண்டுள்ளது.

இதில் முக்கியமாக, தமிழ் சிங்கள இரு மாநிலங்களின் முக்கிய நன்மைகள் பின்வருமாறு:

▪ நிலம், கடல், வானம் ஆகியவற்றிலிருந்து அனைத்து இயற்கை வளங்களுக்கும் மாநிலங்களும் இறையாண்மை கொண்டு உள்ளது. அதாவது, வடகிழக்கு நிலத்திலும் கடலிலும் தமிழ் மாநிலம் அதன் இறையாண்மை கொண்டிருக்கும்; அதே சமயம், சிங்கள தென் பகுதியின் நிலத்திலும் கடலிலும் சிங்கள மாநிலம் அதன் இறையாண்மை கொண்டிருக்கும்.
▪ மாநிலங்களே அதன் சட்டம் மற்றும் ஒழுங்கை உருவாக்கவும் பராமரிக்கவும் முடியும். இதில் கிராமங்களுக்கு தமிழ் போலீஸ் படைகளும் தமிழ் மாநிலத்த்திரற்கு "தமிழ் மாநில போலீஸ்" படைகளும் உள் அடங்கும்.
▪ மத்திய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையை மீறாது, பொருளாதார/வர்த்தக அல்லது பயனுள்ள உடன்படிக்கைகளை வெளிநாட்டுகளுடன் தமிழ் அல்லது சிங்கள மாநிலங்கள் செய்யமுடியும்.
மேல் உள்ளவை சமஸ்டி அல்லது கூட்டாச்சி என்றால் என்ன என்பதை எடுத்து காட்டுகிறது. இதனை கனடா அமெரிக்க ஜெர்மனி சுவிஸ் போன்ற நாடுகளில் வாழும் மக்களிடம் கேட்டு அறியலாம்.

கொடூரமான சிங்கள ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பின் கீழ் வாழும் எங்கள் அன்பானவர்களுக்கு, ஈழத் தமிழர்கள், புத்தகங்கள் அல்லது செய்தித்தாள் கட்டுரைகள் மூலம் தான் சமஸ்டி பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.

சம்பந்தன், சுமந்திரன் மற்றும் பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியல்வாதிகள் கூட சமஸ்டி (கூட்டாட்சி) அரசியலமைப்பை பற்றி முற்றிலும் தெரியாது. ஆனால் அவர்கள் அனைவரும் சமஸ்டி பற்றி பேசுகின்றனர். சமஸ்டிபற்றி தெரியாததிற்கு காரணம் இந்த அரசியல்வாதிகள் சமஸ்டி நாட்டில் வாழ்ந்ததில்லை. எழுத்துக்கள் மூலம் தான் சமஸ்டி பற்றி தெரியும். கனடா அல்லது அமெரிக்காவிலிருந்து நிபுணரைப் பெற்று சமஸ்டி பற்றி படிப்பது தான் ஒரே வழி.

இல்லாவிட்டால், அது சமஸ்டி மறைந்திருப்பதாயும், பெயர் பலகை தேவையில்லை என்பதும், சிங்களத்தில் ஒற்றை ஆட்சி (ஏக்கிய ராஜ்ஜ) என்று எழுதியிருந்தால் கண்களை மூடி சமஸ்டி என்று நினைத்தால் ஒற்றை ஆட்சி சமஸ்டி யாக மாறும் என்பதும், தமிழரை மடையர் என்பது மட்டுமல்லாமல் தாம் புத்தி கூர்மை யானவர்கள் என்று நினைப்பவர்களை தமிழர் தாயகத்திலிருந்து துரத்த வேண்டும்.

மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே ஒரு கவர்னர் இருக்கிற முழு சமஸ்டியும், பெயர் பலகை இல்லாத சமஸ்டியும் உலகில் இல்லை.

இந்த ஒற்றை ஆட்சியை(ஏக்கிய ராஜ்ஜ) சமஸ்டி அமைப்பே என்று தமிழர்களை முட்டாளாக்குவதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் முட்டாள் தர்க்கம்.

ரம்புக்கான தமிழர் அமைப்பு (Tamils for Trump)

Communication Director
Tamils for Trump
914 721 0505
email us here

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.