There were 1,661 press releases posted in the last 24 hours and 413,962 in the last 365 days.

தமிழ் தாயகத்தில் இவ்வாண்டின் சிறந்த மனிதர் (Man of the Year in Tamil Homeland)

இவ்வாண்டின் சிறந்த மனிதர்: விக்கினேஸ்வரனும், வவுனியா தாய்மார்களின் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டமும்

இம்முறை விக்கினேஸ்வரனையும், வவுனியா தாய்மார்களின் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் நாம் " இவ்வாண்டின் சிறந்த மனிதர் " என தெரிவு செய்துள்ளோம்.

NEW YORK, NEW YORK, USA, December 30, 2017 /EINPresswire.com/ -- புலம் பெயர் தமிழரின் செய்திகள், ஆகிய நாம் வருடா வருடம் " இவ்வாண்டின் சிறந்த மனிதர்" ஒருவரை தெரிவு செய்வது என்று எமது ஆசிரியர் குழு (Editorial Board ) முடிவு எடுத்தது. இம்முறை விக்கினேஸ்வரனையும், வவுனியா தாய்மார்களின் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் நாம் " இவ்வாண்டின் சிறந்த மனிதர் " என தெரிவு செய்துள்ளோம்.

முதல் அமைச்சர் விக்னேஸ்வரனை " இவ்வாண்டின் சிறந்த மனிதர் "க்கு தெரிவு செய்ததின் காரணம்:

1. இவர் ஒரு தமிழர்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளில் புத்தி கூர்மையானவர், இசை ஞானி, ஆத்மீகர், நேர்மையானவர், பயமற்றவர், ஓர் நீதியரசர், விலைபோக மறுப்பவர், அவர் தமிழ் வரலாற்றை நன்றாக அறிந்தவர், தமிழ் மக்களால் நேசிக்கப்படுபவர்.

2. வடகிழக்கு இணைப்பின் பின்னணி காரணங்களையும் தேவையையும் தமிழர்களுக்கும், சர்வதேசத்திற்கும் எடுத்து விளக்கியவர்.

3. வடகிழக்கு இணைந்த சமஷ்டியின் தேவையை, அது இல்லாவிடில் தமிழர்கள் 20-40 வருடங்களில் வடகிழக்கில் அழிந்து விடுவார்கள் என்று உலகுக்கு எடுத்து கூறியவர்.

4.தமிழர்கள் "கள்ளதோணி" என்று முன்னர் சிங்களவர்கள் கூறிய போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரித்துவிட்டு அதனை ஏற்பது போல இருப்பார்கள்.ஆனால் விக்கினேஸ்வரன், தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடி மக்கள் என்றும், சிங்களவர்கள் பின்பு இலங்கைக்கு வந்தவர்கள் என்றும் சரித்திர ரீதியாக நிரூபித்தவர். இதனை கேட்ட சிங்களவர்கள் இவர் ஒரு இனவாதி என்று அழைத்தார்கள்.

மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கினேஸ்வரன் போன்று கதைத்தால், சிங்களவர்கள் நொந்து போவார்கள் என்று பயம்.அத்துடன் இந்த தமிழ் எம். பிக்களுக்கு சரித்திரம் புரியுமோ தெரியவில்லை.


நாம் இங்கு இவரது பலவீனத்தினை கூறவிரும்புகின்றோம்:

1. ஆரியகுள நாகவிகாரை தமிழர்களுக்கு எதிராக 1970ல் நடந்தமையால், பல தமிழர்கள் அதனை உடைது அழித்தார்கள் . விக்கினேஸ்வரன் அங்கு சென்று வழிபட்டது தமிழர்களுக்கு விரும்பாத விடையம். இது தமிழர்களை கவலைப்படுத்தியது. இந்த விடையம் ஐ.நாவில் (UNHRC) பிழையாக கருதி நல்லிணக்கம் நன்றாய் போகின்றது என்று கருதப்பட்டது.

2. சில தடவைகள், விக்கினேஸ்வரன் தனது அடிப்படை கொள்கைகளை முரண்பட்டு கதைப்பது.

3. சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு (70 வருடமாக) தீர்வு தரமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இராஜதந்திரிகள், தூதுவர்கள் அல்லது அமைச்சர்கள் வரும்போது தமிழருக்கான அரசியல் தீர்வுக்கு மத்தியஸ்தம் வகிக்க கேட்கவிலை. ஏனெனில் உலகில் எந்தவொரு இனக்குழுவினருக்கும் சுதந்திரம் கொடுக்கும் அதிகாரத்தை அமெரிக்காவும், அமெரிக்க நட்பு நாடுகளும் மட்டுமே கொண்டுள்ளது.

4. தமிழர்கள் அதிகம் முதல் அமைச்சர் விக்னேஸ்வரனை நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையை மனதில் நிறுத்தி துணிவுடன் நடக்கவேண்டும்

வவுனியா தாய்மாரின் சுழர்ச்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாம் " இவ்வாண்டின் சிறந்த மனிதர் "க்கு பட்டியலில் தேர்வு செய்தமைக்கான காரணம்:

1. நாம் எட்டு மாவட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தை கௌரவிப்பதோடு இவர்கள் தொடர் ந்தும் இதனை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றோம்.

2. ஆனால் வவுனியா போராட்டம் செய்பவர்கள் மேம்பட்ட சிந்தனை உடையவர்கள். இவர்களின் மேம்பட்ட சிந்தனை தான் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம்.

3. இவர்கள் தான் நீர்த்துப்போய் இருந்த தமிழர்களின் உரிமை போராட்டத்தை,சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு வித்திட்டவர்கள்.

4. ஆனால் வவுனியா போராட்ட க் காரர்கள் இலங்கை அரசை இரு தடவை சந்தித்து. பின்னர் மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கம் சந்திக்க கேட்ட போது ஜனாதிபதியுடன் படம் எடுத்த மூன்று தமிழ் பிள்ளைகளையும் விடுதலை செய்தால்தான், நாம் சந்திப்போம் என்று துணிந்து சொன்னவர்கள்.

5. இவர்கள் தொடர்ச்சியாக உண்ணா விரதம் தொடர்ந்த போது சிறிலங்கா அரசாங்கம் மந்திரிமாரினை அனுப்பி கொழும்பில் கதைப்பதற்கு அழைத்தது. அங்கு சிங்கள சேவையாளரான சுமந்திரன் இவர்களை பிரதிநிதிப்படுத்த முயன்றபோது, சுமந்திரன் இந்த பேச்சுவார்தையில் இருந்து விலகி சென்றால்தான், தாம் பேசமுடியும் என்று சொல்லி சிங்கள சேவையாளரான சுமந்திரனின் ஈடுபாட்டினை முறையடித்தவர்கள்.

6. இவர்களின் முடிவான முடிவு அமெரிக்காவின் ஈடுபாடுகளால்தான் ஒர் நல்ல முடிவைத்தரும் என்றார்கள். அமெரிக்காவை அழைத்தார்கள்.

7. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்லாந்து, சுவீடன், ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இவர்களின் போராடடத்தை நேரில் சந்தித்து வரவேற்றதோடு, காணாமல் போனவர்களில் அதிக அக்கறை கொண்டார்கள். இதன் விளைவே முதல் தடவையாக "சர்வதேச காணாமல் போனோரின் நாள்" கொழும்பில் சர்வதேச தூதுவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

8. இவர்களின் கடின உழைப்பினால் ஐ.நாவில் இருந்து இரு குழுக்கள் அவர்களை சந்தித்தார்கள். அத்துடன் இவர்களின் போராட்டத்தினையும் வரவேற்றார்கள்.

9. எமது வரலாற்றில் எமது அரசியல் தீர்வுக்கு ஒருவரும் அமெரிக்காவிடம் உதவி கேட்க்கவில்லை, இவர்கள் தான் முதலில் தமிழர் அரசியல் தீர்வுக்கும் அமெரிக்காவை அழைத்துள்ளார்கள். உலகில் எந்தவொரு இனக்குழுவினருக்கும் சுதந்திரம் கொடுக்கும் அதிகாரத்தை அமெரிக்கா மட்டுமே கொண்டுள்ளது என்பதை தமிழருக்கு எடுத்துரைத்தார்கள்.

10. பல நாடுகளில் உள்ள சர்வதேச ஊடகங்கள், இவர்களின் போராட்டத்துக்கு பிரதான பத்திரிகைகளிலும் முழுப் பக்கத்தில் பிரசுரித்தார்கள். நமது போராட்டத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இவர்கள் வெற்றி காண்பதை இது காட்டுகிறது.

11. சம்பந்தன் தான், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தலையீட்டுக்கு முட்டுக்கட்டை என்று சம்பந்தனை விலகுமாறு துணிவாக கேட்டார்கள்.

எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளையும் ஒப்பிடும்போது இந்த பாதிக்கப்பட்டவர்கள் மிகப்பெரிய அளவில் தமிழர்க்கு சேவை செய்துள்ளனர். இந்த காரணங்கள் நாம் அவர்களை எங்கள் " இவ்வாண்டின் சிறந்த மனிதர்"ஆக தேர்ந்தெடுத்தோம்.

Editor
Tamil Diaspora News
516 629 0413
email us here