There were 2,129 press releases posted in the last 24 hours and 403,439 in the last 365 days.

முள்ளிவாய்க்கால் கஞ்சியை கனடாவில் பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் வழங்கவுள்ளது.

* மே 13 சனிக்கிழமை முதல் - மே1 8 ,வியாழன் வரை- * புதிய ஸ்பைசிலண்ட் சுப்பர்மார்க்கெட்- 6065 ஸ்டீல்ஸ் கிழக்கு,&மார்க்கம் M1X 1N5 * காலை 10 முதல் - மாலை 7 மணி

முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்தின் உணவுத் தடையின் விளைவாக ,முற்றுகையிடப்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றழைக்கப்படும் அரிசிக் கஞ்சியை உண்டு உயிர் பிழைத்தனர்.”
— டாக்டர் குமுதினி குணரத்தினம்
TORONTO, CANADA, May 10, 2023/EINPresswire.com/ --

தமிழினத்தின் துன்பம், இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிக்கப் போவதாக பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

* மே 13 சனிக்கிழமை முதல் -18 ,வியாழன் வரை (மே 18).

* புதிய ஸ்பைசிலண்ட் சுப்பர்மார்க்கெட்- 6065 ஸ்டீல்ஸ் கிழக்கு,&மார்க்கம் M1X 1N5.

* நேரம்: காலை 10:00 - முதல் மாலை 7:00 மணி வரை.

* தொடர்புகட்கு-டாக்டர் குமுதினி குணரத்தினம்
மின்னஞ்சல்: PeoplesMovementForReferendum@gmail.com

போருக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் ஒரு பாதுகாப்பான பிராந்தியத்தை நிறுவுவதாக அறிவித்தது ,மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக தமிழர்களை அங்கு குடியேற ஊக்கப்படுத்தியது. அரசாங்கத்தின் உறுதிமொழியில் நம்பிக்கை வைத்து சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் எனப்படும் பாதுகாப்பான வலயத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் போர் தடை வலயத்திற்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அரசாங்கப் படைகள் தமிழர்கள் மீது குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியது. இலங்கை மீதான ஐ.நாவின் உள்ளக மதிப்பாய்வின்படி, இறுதிக்கட்டப் போரின் போது சுமார் 70,000 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்தின் உணவுத் தடையின் விளைவாக ,முற்றுகையிடப்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றழைக்கப்படும் அரிசிக் கஞ்சியை உண்டு உயிர் பிழைத்தனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதன் மூலம், இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான இனப்படுகொலைப் போரின் போது எமது மக்களின் சகிப்புத்தன்மை, மற்றும் துன்பங்களை இளம் தலைமுறையும், நினைவு கூருவதுடன்,அவர்களின் பண்பாட்டை கெளரவப்படுத்தும்நினைவாகவும்,இதனை வழங்குகின்றோம்.

இந்த நினைவேந்தலில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

டாக்டர் குமுதினி குணரத்தினம்
ஒருங்கிணைப்பாளர்
வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

Mullivaikal Kanchi to be distributed by People’s Movement for Referendum in Canada
https://www.einpresswire.com/article/632745865/mullivaikal-kanchi-to-be-distributed-by-people-s-movement-for-referendum-in-canada

Dr. Kumuthini Kunaratnam
People’s Moment For Referendum
peoplesMovementForReferendum@gmail.com

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.