There were 1,123 press releases posted in the last 24 hours and 400,927 in the last 365 days.

காணாமல் ஆக்கப்பட்ட தமது குழந்தைகள் எங்கே உள்ளார்கள் என கேட்டு தமிழ் தாய்மார்கள் கொழும்பில் போராட்டம்

8 months old when Disappeared

3 years old when Disappeared

10 years old when Disappeared

School Students when Disappeared

Tamil Mothers Seeking their Disappeared Babies Protest Outside UN in Colombo

" எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் எங்கேயுள்ளார்கள் என்பதை கண்டறிய ஒரு சர்வதேச குழுவை நியமிக்கவும் "

COLOMBO, SRI LANKA, October 25, 2022 /EINPresswire.com/ -- நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் தாய்மார்கள் கண்ணீருடன் கொழும்பில் ஆர்ப்பாட்டம். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது குழந்தைகள், பேரக்குழந்தைகள், தமது அன்புக்குரியவர்களுக்கு எங்கே உள்ளார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்தினர். Watch: https://fb.watch/gcHu1kXew4/

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் எட்டு மாத வயதுடைய குழந்தைகளும் அடங்கி இருந்தனர். பல குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும் இவர்கள் 29 வரையிலான குழந்தைகளின் விபரங்களை புகைப்படங்கள் மற்றும் வயது என்பனவற்றுடன் ஆவணப்படுத்தியுள்ளனர்.

“காணாமல் போன சில குழந்தைகளுக்கு இப்போது 14 வயது இருக்கும். எங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் காணாமல் போன மற்றய அன்புக்குரியவர்கள் பற்றி நாங்கள் தொடர்ந்தும் கவலைப்படுகிறோம்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் தெரிவித்தனர்.

இலங்கை தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இந்த தமிழ் தாய்மார்கள் தொடர்ச்சியாகவே அரச புலனாய்வு அமைப்புகளின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர்.

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரங்களிடமும் அவர்கள் மகஜர்களை சமர்ப்பித்து, தங்கள் அன்புக்குரியவர்கள் எங்குள்ளார்கள் என்பதை கண்டறியவும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக பொறுப்பு நிலையில் இருந்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை அடையாளம் காணவும் சர்வதேச தகுதி வாய்ந்தவர்களை கொண்ட விசாரணை குழுவை நியமிக்குமாறும் ஐ.நா.வை வலியுறுத்தினர். அத்துடன் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற தமது நீண்டகால கோரிக்கையும் மீண்டும் வலியுறுத்தினர்.

* கோத்தபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்க உட்பட பல ஜனாதிபதிகள் இந்த பாரியளவிலான காணாமல் ஆக்கப்பட்டமை நிகழ்ந்த போது ஆட்சியில் அல்லது பொறுப்பு நிலையில் இருந்தனர்.

* காணாமல் ஆக்கப்பட்டமை நிகழ்ந்த காலத்தில் பொறுப்பு நிலையில் இருந்த இராணுவ அதிகாரிகளில் சரத் பொன்சேகா மற்றும் ஷெவேந்திர சில்வா குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Watch: https://fb.watch/gcHu1kXew4/


** வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் - வடக்கு கிழக்கு மாகாணங்கள் - ஐ.நா. விடம் சமர்ப்பித்த மகஜர்:


1) பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்கா ஆயுத படையினரால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். சிறிய விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி எங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிறிலங்காவின் ஆயுத படையினரிடன் எங்கள் அன்புக்குரியவர்களை ஒப்படைத்தோம். பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன, இன்னும் அவர்களின் நிலையைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை, அவர்கள் "காணாமல்" ஆகிவிட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு தற்போது 14 வயது இருக்கும். அவர்களின் நலம் பற்றியும் மற்றும் காணாமல் போன மற்றய அன்புக்குரியவர்கள் பற்றியும் நாங்கள் தொடர்ந்தும் கவலைப்படுகிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில், உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருப்பதாகக் கூறியுள்ளது.


2). அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எமது வேண்டுகோள்ற்று, ம் எமது அமைதியான போராட்டங்கள்:

தொடர்ச்சியாக வந்த சிறிலங்கா அரச தலைவர்களைச் சந்தித்து எமது அன்புக்குரியவர்களை எங்களிடம் ஒப்படைக்குமாறு அல்லது குறைந்த பட்சம் அவர்களின் நிலையை எமக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

எமது வேண்டுகோள் எதுவும் செவிசாய்க்கப்படாததால், கடந்த ஐந்தரை ஆண்டுகளாக (2,000 நாட்கள்) வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு இடங்களில் அமைதியான தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்களின் அமைதியான போராட்டங்களும் உண்ணாவிரதப் போராட்டங்களும் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டுள்ள பெருமளவிலான சிறிலங்கா ஆயுதப் படைகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. எமது அன்புக்குரியவர்கள் காணாமல் போவதற்கு காரணமான சிறிலங்கா ஆயுதப் படையினரே தமிழர் பிரதேசங்களில் இப்போதும் நிலைகொண்டுள்ளனர். இந்த அச்சுறுத்தும் சூழலையிலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். எமது போராட்டங்களில் கலந்துகொண்ட 132 தாய், தந்தையர்கள் தங்கள் குழந்தைகளின் நிலை அறியாமலேயே உயிரிழந்துள்ளனர்.


3) காணாமல் போனோர் அலுவலகத்தை (OMP) அமைத்து ஏமாற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் தந்திரம்:

ஒருபுறம், அரசாங்கம் தனது ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி எங்களை அச்சுறுத்தும் அதே வேளையில், மறுபுறம், மனித உரிமைகள் கவுன்சிலின் 30/1 தீர்மானதிற்கு பதிலளிக்கும் வகையில் காணாமல் போனோர் அலுவலகத்தை (OMP) ஸ்தாபித்து எம்மையும் மனித உரிமைகள் பேரவையையும் (UNHRC) ஏமாற்ற நடவடிக்கை எடுத்தது. . எவ்வாறாயினும், 2017 செப்டம்பரில் இது செயற்படுத்தப்பட்டதில் இருந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சேவை செய்யும் நேர்மையான நோக்கம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்தது. அதன் பெயரான, "காணாமல் போனவர்களின் அலுவலகம்" என்பது, சம்பந்தப்பட்ட நபர்கள் அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை மறைத்து, அவர்களே சுயமாகவே காணாமல் போனார்கள் என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தவே முனைகின்றனர்.

2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி, யுத்தத்தின் முடிவில் பாரியளவில் காணாமல் போன சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன OMP இன் உறுப்பினராக நியமிக்கப்பட்டதிலிருந்து இதன் சுயாதீன தன்மையை யாரும் விளங்கிக்கொள்ளலாம்.


4). இழப்பீட்டு அலுவலகம் - எமது அன்புக்குரியவர்களின் உயிர்களுக்கு அவமதிப்பு:

2018 இல் சிறிலங்கா அரசானது இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவியது. இந்த முயற்சியை நாங்கள் கடுமையாக நிராகரித்தோம், மேலும் இது எங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களுக்கு விலை நிர்ணயிக்கும் ஒரு அவமதிப்பாகவே கருதுகிறோம். எம்மை வாயடைக்க லஞ்சம் வாங்கும் முயற்சியாகவும் பார்க்கின்றோம். இது நீதி பொறிமுறையை நிராகரித்து குற்றவாளிகளை பாதுகாக்கும் ஓர் முயற்சியாகும்.


5) காணாமல் போனோர் அலுவலகம் (OMP) தொடர்பான ஐ.நா வின் நிலைப்பாடு

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் Michelle Bachelet அம்மையார் அவர்களின் (OHCHR) 2021 ஜூன் அறிக்கையில், OMP மற்றும் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்திய நியமனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.


6) நீதியைப் பெற, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) அனுப்பவும்.

சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறை மூலம் மட்டுமே நீதியை அடைய முடியும் என்றும் நாங்கள் திடமாக நம்புகிறோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது 2021 பெப்ரவரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, சிறீலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைக்கப்பட வேண்டும். அவரது பரிந்துரையை அனைத்து முந்தைய மனித உரிமைகள் ஆணையாளர்கள், பதினொரு முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகள் எழுதியவர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா பொதுச் செயலாளரின் நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிந்திருந்தனர்.


7) எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் எங்கேயுள்ளார்கள் என்பதை கண்டறிய ஒரு சர்வதேச குழுவை நியமிக்கவும்:

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ற வகையில், காணாமல் போன எங்களின் குழந்தைகளும் அன்புக்குரியவர்களின் எங்கேயுள்ளார்கள் என்பதை சுயாதீனமாக விசாரிக்க சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதே காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டறிவதற்கான ஒரே வழி என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதன் மூலம் தான் காணாமல் ஆக்கப்பட்ட நமது உறவுகளுக்கு எங்கேயுள்ளார்கள் என்ற உண்மையை கண்டறிய முடியும்.


Seeking to Find the Whereabouts of Their Disappeared Babies, Tamil Mothers Protest in the Sri Lankan Capital Outside UN.
https://www.einpresswire.com/article/596386336/seeking-to-find-the-whereabouts-of-their-disappeared-babies-tamil-mothers-protest-in-the-sri-lankan-capital-outside-un

Leela Ananthan
Association for Relatives of the Enforced Disappearances Nor
+94 77 886 4360
ananthan.acl@gmail.com