There were 1,644 press releases posted in the last 24 hours and 401,755 in the last 365 days.

கோத்தபாயவைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும் கையெழுத்துபோராட்டம் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Arrest Gota Signature Campaign

ஒப்பிடுவதற்கான இணைப்பு - https://chng.it/rQVfCj4KdQ

கோத்தபாய கொழும்புபிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழனப் படுகொகைக்காகவோ, போர்க்குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்.”
— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
NEW YORK, UNITED STATES, July 25, 2022 /EINPresswire.com/ --

* ஒப்பிடுவதற்கான இணைப்பு - https://chng.it/rQVfCj4KdQ
* Video: https://youtu.be/7RVatQcjKzY

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் நாம் இந்தக் கோரிக்கைகளை சிங்கப்பூர் சட்ட மாஅதிபரினை நோக்கி முன்வைக்கின்றோம்.
https://youtu.be/7RVatQcjKzY

சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும் கூட, ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும், அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமாஅதிபருக்கு உண்டு என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

மேலும் 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் சிறீலங்காவின் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம், தமிழர்கள் அங்கு அரசியல் நீரோடையில் இல்லை என்றும்" the root caused is the conflict ....."என்று கூறியிருப்பதையும் மற்றும் 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பஷிலேற் அவர்களும் dangerous exclusionary policy of the Sri Lankan Government என்று அதாவது அங்கே இனநாயகம் தலைதூக்கி இருப்பதையும் நாங்கள் இங்கு சட்டிக்காட்டி, மேலும் சிறீலங்கா ஒரு இனவாத அரசு, அரச கட்டமைப்புக்கள் நீதிமன்றம் உட்பட சிங்களத்தை மையப்படுத்தி இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையும் நாம் இம் மனுவில் சுட்டிக் காட்டி உள்ளோம்.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சிறீலன்ஹ்காவில் நடந்த இந்தக் குற்றங்கள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை, அல்குசேன் மற்றும் தற்போதைய ஆனையாளர் மிசேல் பசேலே ஆகியோர் நாடுகளை நோக்கி முன்வைத்த கோரிக்கையினையும் எமது கோரிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

இன்றைக்கு கோத்தபாய ராஜபக்‌சே திரும்பவும் கொழும்புபிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழனப் படுகொகைக்காகவோ, மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கு எதிராகவோ, போர்க்குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்பட மாட்டார்.

தற்சமயம் சர்வேந்திர டி சில்வா இன்னொரு இனப்படுகொலையாளி. இன்னொரு போர்க்குற்றவாளி. அமெரிக்காவின் ளயnஉவழைn இற்கு உள்ளானவர் இன்றைக்கு அங்கு ஒரு முக்கிய பதவியை வகித்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் அங்கு தமிழர்களுக்கான நீதி ஒருபோதும் கிடையாது.

எனவே சிங்கப்பூர் கோத்தபாயாவைக் கைது செய்து விசாரித்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாயகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பாகவும், உலகத்தில் தமிழர்கள் சார்பாகவும் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைத்து இந்தக் கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளோம். இது உடனடியாக செய்ய வேண்டிய விடயம். ஏனெனில் ராஜபக்‌சே எந்த சமயமும் சிங்கப்பூரை விட்டு வெளிக்கிட்டு விடுவார் எனவே விரைவாக இதில் அனைவரும் கையெழுத்து இட்டு உலகளாவிய தமிழர்களின் கோரிக்கை இது என்பதை சிங்கப்பூர் சட்டமாஅதிபருக்கு நாங்கள் எடுத்துரைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்.

* ஒப்பிடுவதற்கான இணைப்பு - https://chng.it/rQVfCj4KdQ
* Video: https://youtu.be/7RVatQcjKzY

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி *
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow on Twitter: @TGTE_PMO

Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here

Arrest Gota Signature Campaign