There were 1,857 press releases posted in the last 24 hours and 400,162 in the last 365 days.

தியாகி திலீபன் உலகளாவிய நினைவேந்தல் கூட்டத்தில் இணைய அழைப்பு: நாடுகடந்த தமிழீழ அரசாங்ம்!

எதிர்வரும் செப் 26ம் நாள் சனிக்கிழமை அமெரிக்கா (நியுயோர்க்) மதியம் 1:30 மணிக்கு அமெரிக்காவில் தொடங்கவிருக்கின்றது

நியுயோர்க், அமெரிக்கா, September 23, 2020 /EINPresswire.com/ --

சிறிலங்காவினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் தமிழர்களின் நினைவேந்தும் உரிமைகளுக்கு தடை போடும் சிறிலங்காவுக்கு எதிராக, உலகத்தமிழர்கள் இணையவழியே ஒன்றுகூடி தியாகி லெப் கேணல் திலீபனை நினைவேந்தும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்ம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் செப் 26ம் நாள் சனிக்கிழமை அமெரிக்கா (நியுயோர்க்) மதியம் 1:30 மணிக்கு அமெரிக்காவில் தொடங்கவிருக்கின்ற மைய நிகழ்வினைத் தொடர்ந்து உலகப்பரங்பெங்கும் இருந்து வணக்க நிகழ்வுகள் இணையவிருக்கின்றன.

இவ்வணக்க நிகழ்வில் தியாகி திலீபனை நினைவேந்தும் கவிதைகள், பாடல்களை இணையவழி வழங்க விரும்பும் உலகத்தமிழ் உறவுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்னராக விபரங்களை குறித்த media@tgte.org இந்த மின்னஞ்சலுக்கு அறியத்தருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து தியாகி திலீபன் முன்வைத்த அரசியலும், சமகால அரசியலும் என்ற தொனிப்பொருளில் கருதரங்கொன்று இடம்பெறவிருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்ம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter