சவேந்திர சில்வாவின் நியமனம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்த்தின் அவசரத்தை வலியுறுத்துகிறது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இவரது நியமனம் என்பது பொறுப்புக்கூறல், நீதிப்பொறிமுறை என்பனவற்றில் இருந்து சிறிலங்கா அரசு தவறிவருகின்றதோடு, அது ஒரு இனநாயக அரசென்பதனை வெளிப்படுத்தி வருகிறது
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டிருப்பதானது, சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசியத்தினை உடனடியாக வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருந்த DIRTY DOZEN - Genocidaires - War Criminals எனும் சிறிலங்காவின் தமிழினஅழிப்பாளர்களின் முதற்தொகுதி 12 பேரில் இனப்படுகொலையளராக அடையாளம் காணப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சர்வதேச நாடுகளாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் ஓர் போர் குற்றவாளியாக அடையாளங்காட்டப்பட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மேற்கொண்டிருந்த புலனாய்வுகளிலும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா ஓரு குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பில் ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என பல சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் தமது கண்டனங்களையும் கவலைiயும் வெளிப்படுத்தி வருகின்றன.
இவரது நியமனம் என்பது பொறுப்புக்கூறல், நீதிப்பொறிமுறை என்பனவற்றில் இருந்து சிறிலங்கா அரசு தவறிவருகின்ற என்பதோடு, அது ஒரு இனநாயக அரசென்பதனை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் அவசியத்தினையே இவரது நியமனம் உடனடியாக வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆவணம் இணைப்பு : Dirty Dozen
ENGLISH:
Sri Lanka’s Appointment of a War Criminal as Military Commander Reiterates the Urgency to Refer Sri Lanka to ICC: TGTE
https://www.einpresswire.com/article/494055803/sri-lanka-s-appointment-of-a-war-criminal-as-military-commander-reiterates-the-urgency-to-refer-sri-lanka-to-icc-tgte
Twitter: @TGTE_PMO
Email: r.thave@tgte.org
Facebook: https://www.facebook.com/TGTE.Secretariat/
Web: www.tgte.org
Web: www.tgte-us.org
Web: www.tgte-us.org
Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
