There were 829 press releases posted in the last 24 hours and 358,414 in the last 365 days.

சிறிலங்கா சுதந்திர தின எதிர்ப்பு போராடத்தின்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் - ஐநா நடவடிக்கை எடுக்க ருத்திரகுமாரன் வேண்டுகோள்

சில வாரங்களில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சிறிலங்கா தொடர்பான உயர் ஸ்தானிகர் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கும் தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது

இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், பெண்கள் உட்பட பலர் தாக்கப்பட்டனர். ஐந்து மாணவர் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.”
— பிரதமர் திரு.விசுவநாதன் ருத்ரகுமாரன்
NEW YORK, UNITED STATES, February 6, 2024 /EINPresswire.com/ --

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் திரு. வோல்கர் டர்க் (Mr. Volker Türk) அவர்களிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமர் திரு.விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் சமீபத்தில் கிளிநொச்சியில், நடந்த சிறிலங்கா சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் பொலிசாரின் மிலேச்சத்தனமான தாக்கு தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், எதிர்காலத் தில் ஈழத் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்களை சிறிலங்கா அரசு அடக்காமல் இருக்க உறுதிசெய்யுமாறு வற்புறுத்தி உள்ளார்.

மேலும் இன்னும் சில வாரங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சிறிலங்கா தொடர்பான உயர் ஸ்தானிகர் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கும் தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளர்.

"இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், பெண்கள் உட்பட பலர் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பிரதான தமிழ் அரசியல் கட்சியின் தலைவர் திரு. சிவஞானம் ஸ்ரீதரன், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர் திரு. சார்ள்ஸ் நிர்மலநாதன், ஆகியோர் ஆவர்." என்றார் ருத்ரகுமாரன்.

"இந்தப் போராட்டம் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், மற்றும் பல தமிழ் சிவில் சமூகக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் தமிழர் தாயகமான கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் நடந்த போராட்டங்களை மையமாகக் கொண்டது."


* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.