There were 1,659 press releases posted in the last 24 hours and 438,059 in the last 365 days.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் இராசரத்தினம் தர்சஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

JAFFNA, SRI LANKA, December 14, 2023 /EINPresswire.com/ --

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவரும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளருமான இராசரத்தினம் தர்சஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தமை , பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள்,ஊடக சந்திப்புக்கள் , காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் ஓம் எம்பியின் வருகைக்கு எதிராக முன்னெடுக்கப்பபட்ட போராட்டம் தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை சுமார் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இ.தர்ஷன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Lanka News
LN
email us here

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.