நாடாளுமன்ற உறுப்பினர் பொனம்பலம் கைது - அமெரிக்க இராஜதந்திரிகளை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு பிளிங்கனுக்கு வலியுறுத்தல்

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) மனித உரிமைகள் அமைச்சினால் அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதம்
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) மனித உரிமைகள் அமைச்சினால் செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கூட்டு கடிதத்தில் இந்த முறையீடு அனுப்பப்பட்டுள்ளது.
"இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சமீபத்திய செயல்பாடுகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கூட்டாக எழுதுகிறோம், மேலும் எங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தக் கவலைகளில் முக்கியமானது, இந்துக் கோயில்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதும், அதைத் தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் புத்த கோயில்களைக் கட்டுவதும் ஆகும். இது இலங்கை பாதுகாப்புப் படையினரின் தீவிர ஆதரவுடனும் பாதுகாப்புடனும் செய்யப்படுகிறது” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
"தமிழர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது, இலங்கை காவல்துறை அவர்களைத் துன்புறுத்தியது மற்றும் சமீபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அரசியல் கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. சுஹாஷ் கனகரத்தினம் ஆகியோரைக் கைது செய்தது."
"இந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறையாமல் தொடர்கின்றன, அதே அரசியல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி.) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேறொரு கிராமத்தில் தனது தொகுதியினருடன் சந்திப்பு நடத்தியபோது, ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் சிவில் உடையில் குறுக்கிட்டனர். அவர்களின் அடையாளத்தைத் திரு.பொன்னம்பலம் கோரியபோதும் அவர்கள் இணங்க மறுத்துவிட்டனர். பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் ஒரு பெண் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர். "
"தெளிவாக, தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தந்திரோபாயங்கள், தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் வகையில் உள்ளன. இவை இலங்கை அரசாங்கத்தில் அதி உயர் மட்டத்தின் ஆதரவுடனே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றிய சவேந்திர சில்வா, அந்த அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்துகிறார்” எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள் வெளிப்படையாக மீறப்பட்டு, அவர் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் அவருக்குக் கூடுதலாக அளிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அதிகாரங்கள், தமிழர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைப் பயன்படுத்தி மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அவருக்குக் கூடுதல் ஊக்கத்தையும் தண்டனையின்மையையும் வழங்கியுள்ளன”
" குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களால் நாட்டை திவால் நிலையில் இருந்து பிணை எடுப்பு நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த பாரதூரமான சூழ்நிலைக்குத் தீர்வு காணுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்."
"கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜதந்திரிகளை அனுப்பி, நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது அவதானிப்பதன் மூலம், அரசின் இத்தகைய செயல்பாடுகளைத் தடுப்பதற்கான முதல் படியை நீங்கள்எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இந்தக்கூட்டுக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது:
1. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA); contact@fetna.org
2.இலங்கைத் தமிழ்ச் சங்கம்; President@sangam.org
3. ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் பிஏசி; info@tamilamericansunited.com
4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), மனித உரிமைகள் அமைச்சு; Secretariat@tgte.org
5. ஐக்கிய அமெரிக்கத் தமிழ் செயல் குழு (USTAG); info@theustag.org
6. உலகத் தமிழ் அமைப்பு; wtogroup@gmail.com
Secretary Blinken Urged to Address Sri Lankan Parliamentarian Ponambalam Arrest by Sending US Diplomats to Observe Trial
https://www.einpresswire.com/article/639276880/secretary-blinken-urged-to-address-sri-lankan-parliamentarian-ponambalam-arrest-by-sending-us-diplomats-to-observe-trial
வாசிங்டன் செய்திகள்
 வாசிங்டன் செய்திகள்
Washington News
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Instagram
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
