சிறிலங்காவிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன்: நீதிக்கும், அறநெறிக்கும் புறம்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

IMF
சிறிலங்காப் பொருளியலைக் காப்பாற்றிக் கைதூக்கி விடுவதற்கான இந்தக் கடன், அடுத்தடுத்த ஆட்சிகளின் கீழ் இராணுவமயமாக்கம் செய்யப்பட்ட பிரச்சனை குறித்தும் பேசவில்லை
வழங்குவது “அறநெறிக்கும் நீதிக்கும் புறம்பானது” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
“அப்பாவித் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் இரத்தத்தில் சிறிலங்கா ஆட்சியாளர்களின் கை நனைத்துள்ள வேளையில் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அறநெறிக்கும் நீதிக்கும் புறம்பானது மட்டுமின்றி, மோசமான பொருளியல் கொள்கையும் ஆகும்” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
“பொருளியல் வளர்ச்சியும் சட்டத்தின் ஆட்சியும், குறிப்பாக சிறிலங்கா போன்ற அயோக்கிய அரசில், இணைந்து செல்லக் கூடியவை என்பதை சர்வதேச நாணய நிதியம் (IMF) நன்கறியும். உண்மையில் பொருளியல் வளர்ச்சி சட்டத்தின் ஆட்சியைப் பொறுத்ததே. பொறுப்புக்கூறல் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம்(IMF). அள்ளிக் கொடுப்பது இருப்பதைக் காக்கவும், மக்களுக்கு அரசு தீங்கு செய்வதை நிரந்தரமாக்கவுமே பயன்படும்.”
வங்குரோத்து நிலையில் உள்ள சிறிலங்காப் பொருளியலைக் காப்பாற்றிக் கைதூக்கி விடுவதற்கான இந்தக் கடன் அடுத்தடுத்த ஆட்சிகளின் கீழ் இராணுவமயமாக்கம் செய்யப்பட்ட பிரச்சனை குறித்தும் பேசவில்லை. தமிழர் தாயகத்தின் இராணுவமயமாக்கலுக்கான செலவு மிகவும் பெரிது. தேவைக்கும் அதிகமான இராணுவத்தை பராமரிப்பதற்கும், ஊழலுக்கும், நாடு தன் சர்வதேசக் கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமைக்கான தலையாயக் காரணங்களில் ஒன்றாகும். அரசின் சம்பளச் செலவில் கிட்டத்தட்ட பாதியளவு பாதுகாப்புப் படைகளுக்கே போய் விடுகிறது. பணவீக்கத்துக்காக சரிசெய்த போதுங்கூட, ஆயுத மோதல் உச்சத்தில் இருந்த போது செலவிட்டதை விடக் கூடுதலாக இராணுவச் செலவு செய்யப்படுகிறது என்பது சிங்கப்பூர் பல்கலைக்கழகம் 2021ஆம் ஆண்டு நடத்திய ஆய்விலிருந்து தெரிகிறது [https://www.isas.nus.edu.sg/wp-content/uploads/2021/11/Final-South-Asia- Scan-1.pdf ]. 2022 டிசம்பர் மோதலில், இலங்கையர் பட்ட மொத்தப் பொதுக் கடனின் நிலுவைத் தொகை 84 பில்லியன் அமெரிக்க டாலர்களாக க் கூடியது.
சிறிலங்காவில் நேரிட்ட பொருளியல் பேரிடருக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று தமிழர்களை அடிபணியச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக பெரும்படை கட்டிப் பேணும் பெருத்த நிதிச் சுமை ஆகும். போர் முடிந்து பதின்மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னும் தமிழர் தாயகத்தில் 6 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் இருப்பதாக கலிபோர்னியாவில் இருக்கும் ஒக்லாந்து கல்விக் கழகம் [ https://www.oaklandinstitute.org/sites/oaklandinstitute.org/files/endless-war- web.pdf ], கூறுகிறது. இந்த விகிதாசாரம் உலகில் வேறு எங்கும் காணப்படாதவாறு உயர்ந்தது என்று நம்பப்படுகிறது.
2022 மார்ச்சு 15ஆம் நாள் ஐந்து புலம்பெயர் அமைப்புகளோடு சேர்ந்து சர்வதேச நாணய நிதிய (IMF). இயக்குனருக்கு நாம் எழுதிய கடிதத்தில் “சிறிலங்காவில் மனிதவுரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவுவதற்குப் பொருத்தமான தருணம் இது” என்று குறிப்பிட்டோம். நாம் சுட்டிக் காட்டிய பிரச்சனைகளில் எது குறித்தும் பொருளியல் நிலைப்படுத்தலுக்கான திட்ட நிரலுடன் நடவடிக்கை எடுத்து வரும் சர்வதேச நாணய நிதியமோ அதன் உறுப்பு நாடுகளோ கவலை கொள்ளவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தை தொடர்வதில் சர்வதேச நாணய நிதியம் (IMF) அல்லது அதன் உறுப்பு நாடுகளுக்கு எழுப்பப்பட்ட பிரச்சினைகள் எதுவும் கவலையளிக்கவில்லை என்று நாங்கள் ஏமாற்றமடைகிறோம் என்று உருத்திரகுமாரன் குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர்களின் வேண்டுகோளை மதியாமல் ஐந்தே நாள் கழித்து 2023 மார்ச்சு 20ஆம் நாள் சர்வதேச நாணய நிதியம் (IMF) சிலபல நிபந்தனைகளோடு சிறிலங்காவுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க முன்வந்தது. சிறிலங்காவின் பொருளியல் மற்றும் ஆட்சியியல்
கொள்கைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதும் இந்த நிபந்தனைகளில் அடங்கும். சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள குறிப்பின்படி 48 மாத கடன் திட்டத்தின் நோக்கங்கள்,“பெருமப் பொருளியல் நிலைத்தன்மையையும் (macroeconomic stability) , கடன்படு தாங்குதிறனையும் (debt sustainability ) , மீட்டமைத்தல் நிதிவகை நிலைத்தன்மையைக் பாதுகாத்தல் (safeguarding financial stability ), மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துவதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் ஆகும். சிறிலங்காவுக்குக் கடன் கொடுத்துள்ள மூன்று முக்கிய நாடுகள் – இந்தியா, ஜப்பான், சீனா- சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நிதி வாக்குறுதிகள் வழங்கி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதி (IMF) உதவியைக் பெற்றுக் கொடுப்பதில் முதன்மைப் பங்கு வகித்தன.
அனைத்து திட்ட நடவடிக்கைகளும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மேம்படுத்தும் நிர்வாகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கவனத்தில் கொள்கின்றன என்று சர்வதேச நாணய நிதிய (IMF) குறிப்பு கூறுகிறது; ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கைத்
தீவின் வடகிழக்கில் நிலவும் கடுமையான அடக்குமுறை நிலைமைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த அடக்குமுறை நிலைமைகள், மூலதனத்தை வடிகட்டுவதன் மூலமும், முதலீட்டைத் தடுப்பதன் மூலமும், தொழில்முனைவோரை தடுப்பதன் மூலமும், போரைத் தொடர்ந்து வட கிழக்கில் பொருளாதார மீட்சியைத் தடுத்துள்ளன.
கருத்து வேறுபாட்டிற்கான இடங்கள் குறித்த கவலையின் மத்தியில் இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாணய நிதியம் ஈடுபடுவது பற்றி கேட்டதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, ஆசியா மற்றும் பசிபிக் துறைக்கான மூத்த தூது தலைவர் திரு. பீட்டர் ப்ரூயர் மார்ச் 21, 2023 அன்று நடந்த ஊடக மாநாட்டில் கூறினார்: பொருளாதார விவகாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட" மற்றும் அரசாங்கம் தனது குடிமக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதில் தலையிட சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆணை இல்லை என விடையளித்தார்.
ஆனால், அரசு தன் குடிமக்களோடு எப்படி ஊடாடுகிறது என்பது பொருளியல் செய்திக்குரியதே ஆகும்” என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமரும், சட்டத் தரணியுமாகிய உருத்திரகுமாரன் சொன்னார். “சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறாமையை அரசுக் கொள்கையாக்கிக்
கொண்டுள்ள அரசு சர்வதேச நிதியங்களுக்குப் பொறுப்புக்கூறும் என்று எப்படி நம்ப முடியும்? எவ்வகையான பொறுப்புணர்வையும் சிறிதளவும் மதிப்பதில்லை என்று அரசு காட்டிக் கொண்டுள்ளது. இந்த அரசை நம்புவது மக்கள் விருப்பத்தை மீறுவதாகும் என்பது மட்டுமன்று, தர்க்கத்தையும் ( logic ) மீறுவதாகும்.“
சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்துள்ள போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பது ஐநா மனிதவுரிமைப் பேரவையின் பல தீர்மானங்களின் படி அவசியமாகிறது; இவற்றில் முதலாவது
தீர்மானம் 2015ஆம் ஆண்டு அதிபர் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது இயற்றப்பட்டதாகும் (ஆக, அவருக்கு இது நன்றாகத் தெரியும்); இவ்வாறு பொறுப்புக்கூறும் கடமையில் சிறிலங்கா கேவலமாகத் தோற்றிருப்பதில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து அலட்சியமாய் இருப்பதை மூடி
மறைப்பதற்கு நடப்புப் பொருளியல் பேரிடரை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ள இடமளிக்க வேண்டாம் என நீண்ட காலமாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேசச் சமுதாயத்தை வலியுறுத்தி வருகிறது.
.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐநா மனிதவுரிமைப் பேரவையின் முதல் தீர்மானம் இயற்றப்படுவதற்குச் சற்று முன்னதாக மனிதவுரிமைகளுக்கான உயராணையராக அப்போதிருந்த திரு ஸெய்ட் அல் ஹுசைன் தமது 2015 அறிக்கையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) மேலுரிமை வழங்கும் வகையில் சிறிலங்கா அரசு உரோமாபுரிச் சட்டத்தை (Rome Statute) ஏற்புறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டார். “உரோமாபுரிச் சட்டத்தில் சிறிலங்கா கையொப்பமிட்டுச் சேர வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புச்
சீர்திருத்தத்தின் எல்லைக்கு உட்பட்டதான சட்டத்தின் ஆட்சி எனும் வழிமுறையே ஆகும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது” என்கிறார் உருத்திரகுமாரன். “அடுத்தடுத்துப் பணத் தொகைகள் விடுவிப்பதற்கு ஒரு நிபந்தனையாக உரோமாபுரிச் சட்டத்தைப் பின்னோக்கிப் பொருந்தும்படி (retroactively) ஏற்புறுதி செய்ய வலியுறுத்தும்படி சர்வதேச நாணய நிதியத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.”
IMF Loan to Sri Lanka: ‘Unethical and unjust’ says TGTE
https://www.einpresswire.com/article/624988747/imf-loan-to-sri-lanka-unethical-and-unjust-says-tgte
Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Instagram
Other
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.