There were 1,538 press releases posted in the last 24 hours and 413,201 in the last 365 days.

தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை -இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு

"விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கானசட்டப் போராட்ட கோரிக்கைமனுவிலேயே இவ்விடயம்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது."

இந்திய மக்களுடன்தோழமை தெரிவித்து, இந்தியப் பெருங்கடல்வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும்பேணி வளர்க்கவும், இந்தியாவுடன் தமிழீழம் ஒருசிறப்பு உறவை வார்த்தெடுக்கவும் செய்யும்”
— 013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திரசாசன
NEW DELHI, INDIA, March 9, 2023 /EINPresswire.com/ -- தமிழீழம் என்ற ஈழத்தமிழத்தமிழர்களின்மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை எனநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்தியாஅரசுக்கு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கானசட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாகஇந்திய உள்துறை அமைச்சிடம்விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைமனுவிலேயே இவ்விடயம்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்விடுத்துள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர்கள் அனைவருக்குமான ஓர் தனிநாடு(தமிழீழம்) என்ற விடுதலைப் புலிகளின்குறிக்கோள் இந்தியாவின் இறைமைக்கும்ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகும், இது இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியை(தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்திலிருந்துபிரிப்பதாகும், ஆகவே சட்டத்தின் படி “சட்டப்புறம்பான அமைப்பு” என்ற எல்லை அல்லது வீச்சுக்கு உட்பட்டது என்பதாகும்” என தமிழீழவிடுதலைப் புலிகளை மீதான தடைதொடர்பிலான ஒவ்வோர் அறிக்கையிலும்இந்திய உள்துறை அமைச்சு சொல்லும்குற்றச்சாட்டாக அமைந்து வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்குமறுமொழியாக “தமிழர்கள் தனிநாடு (தமிழீழம்) கோருவது தொடர்பாக ஆதரவாளர்களும்பரிவாளர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியின்பிரிவினையை நிகழ்த்துவதற்கான திட்டம் அல்ல” என தனது புதிய விண்ணப்பத்தில் எடுத்துரைத்துள்ளது.

“தமிழீழ விடுதலைப் புலிகள், தீர்பாயத்தின்முன்னால் வந்து, இந்திய ஆட்புலத்தின் ஒருபகுதியைப் பிரிக்கும் குறிக்கோளை நாங்கள்ஏற்றுக் கொள்ளவில்லை என்று திட்டவட்டமாகநிலை எடுக்க விடாமல் எதுவும் அவர்களை தடுக்கவில்லை'”என்று தீர்ப்பாயம் கூறியிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின்சார்பில் செயல்படத் தகுதியுள்ள ஒருவருக்கும்முறைப்படி தடை தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை என்று நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தனது பதிலாக தற்போதுசமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகதடைநீக்கத்துக்கான செயன்முனைப்பில்இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது.தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகஅறிவிப்பதற்குப் போதிய காரணம் உள்ளதாஎன்பதைத் தீர்ப்புரைக்கும் நோக்கத்துக்காக, இந்திய உள்துறை அமைச்சு டெல்லியில் உள்ளதீர்ப்பாயத்தின் பார்வைக்கு அறிக்கைஅனுப்பியதன் எதிரொலியாக 2019 செப்டம்பர் 5 ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவ்விசாரணையில் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் சார்பில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துகொள்ளும்படி மனுசமர்ப்பித்திருந்தார். தீர்ப்பாயம் நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு இல்லை என்றகாரணத்தினாலும், நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லைஎன்ற காரணத்தினாலும் உருத்திரகுமாரனின்மனுவை நிராகரித்திருந்தது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளஅமைப்புகள் பட்டியலில் இருந்து தமிழீழவிடுதலைப் புலிகளை நீக்கும் படி, விண்ணப்பித்துள்ள நாடுகடந்த தமிழீழஅரசாங்கம், இதற்கான காரணங்களில் ஒன்றாகதமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டில்பேச்சுரிமை மீதும் கூட்டங்கூடும் உரிமையின்மீதும் தொடர்ந்தும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளமுடக்கம் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் நீதிக்கும், அரசியல்இறைமைக்கும் போராடி வருகின்றவர்களின்செயற்பாட்டுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையானது, இடையூறாக அமைகின்றதுஎன இப்புதிய விண்ணபத்தில் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள்சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும்பிற அமைப்புகளின் செயற்பாடுகளுக்குதடையானது இடையூறாக அமைந்துள்ளது.

சுதந்திரமும், இறைமையும் உள்ள தமிழீழ அரசுநிறுவுதல் என்ற இலக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக்கும் இடையில் அதன்இலட்சியத்தில் பொதுத்தன்மைகாணப்படுவதால், நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில்செயற்பாட்டுகளை மேற்கொள்வதற்கு பெரும்நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுவதாகஇந்திய உள்துறை அமைச்சுக்குமுன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கைமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக்கோரிக்கையானது, பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது ஊக்கப்டுத்துவதற்கேஒப்பானது என்ற தவறான புரிதலை இத் தடைஏற்படுத்துகின்றது; எமது குறிக்கோளைஆதரிப்பவர்கள் இந்திய அரசியல்பொதுப்பரப்பில் எடுத்துரைக்கும்உரிமையினைத்தான் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் புதிய விண்ணப்பம் வேண்டிநிற்கிறது” என நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில்என்று சொல்லிக்கொள்ளும் தனிமனிதர்களின்நடவடிக்கைகளானது, விடுதலைப் புலிகளின்தலைமையால் அங்கீகரிக்கப்படாவிட்டால்அவற்றுக்கு விடுதலைப் புலிகளைக்காரணமாக்க முடியாது என்ற நிலைப்பாட்டை சட்டத் தீர்ப்புக்களை ஆதாரம் காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்உள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்புக்கு, ஒரு அமைப்புக்குரிய கட்டுமானம்தற்போது இல்லை என்றும் சுட்டிக்காட்டிஉள்ளது.

இதேவேளை ஈழத்தமிழர்களின் அரசியல்பெருவிருப்பின அடைவதற்கு அரச தந்திரக்களத்தில் இந்திய அரசின் ஆதரவு இன்றியமையாதது என்பதனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.“இந்திய மக்களுடன்தோழமை தெரிவித்து, இந்தியப் பெருங்கடல்வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும்பேணி வளர்க்கவும், இந்தியாவுடன் தமிழீழம் ஒருசிறப்பு உறவை வார்த்தெடுக்கவும் செய்யும்” என2013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டமையையும் இம் மனுவில்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


TGTE's Effort to Remove LTTE from India’s ‘Unlawful Association’ List - New Petition to Ministry of Home Affairs
Link: https://www.einpresswire.com/article/620987731/tgte-s-effort-to-remove-ltte-from-india-s-unlawful-association-list-new-petition-to-ministry-of-home-affairs

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Instagram