There were 465 press releases posted in the last 24 hours and 430,730 in the last 365 days.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் பெண்களின் துயரம் தொடர்கிறது - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Families of disappeared

Families of disappeared

இந்துமதி கிருபசிங்கம் - பெண்கள் பண்பாடு மற்றும் பாரம்பரிய அமைச்சர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

NEW YORK, UNITED STATES, March 8, 2023 /EINPresswire.com/ --

இன்று மார்ச் 8 அனைத்துலக பெண்கள் தினம். சமூக அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் நாள்.

உரிமைகளை வென்றெடுக்கின்ற போராட்டங்கள் மூலமாகவே இந்த நாளை அனைத்துலக மகளிர் தினமாக 1975ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

இந்த மகளிர் தினமானது உலகம் பூராகவும் வாழும்  பெண்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வந்தாலும்  பெண்களுக்கு எதிரான சமூக பொருளாதார பிரச்சனைகள் பாலியல் வன்கொடுமைகள் தொடார்ந்தும் நடைபெற்று வருகின்றதென்பது மறுக்கமுடியாத உண்மை.

தலைவிதி என்றும் கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும் வழமை என்றும் காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள்
முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழுந்து வான் பிளக்கத் தங்கள் உரிமைக்குரலை உலகுக்கு காட்டிநின்ற  பெண் சமுதாயத்தை
உருவாக்கிக்காட்டிய தன்னிகரற்ற எம் தேசியத் தலைவரின் சமகாலத்தவர்கள் நாங்கள்

தாயகத்திலே 90,000 விதவைப் பெண்கள் குடும்ப சுமைக்கான பொருளாதார நிலையினை திட்டமிட்டு முன்னெடுத்தும் நாளாந்த ஜீவனோபாயத்தை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.

தம் கண்முன்னே பெற்ற பிள்ளைகள், கணவர், உடன் பிறத்தோர் மற்றும் தம் உறவுகள் காணாமலாக்கப்பட்ட துயரத்தை மனங்களில் சுமந்து அவர்களுக்கான நீதிவேண்டி நாட்களை கடந்தும் தாய்மார்கள் தாயகத்தில் அமைதி வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

தமிழீழ தனியரசை கட்டியெழுப்பும் போராட்டத்தில் வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதனை சாதித்துக்காட்டிய பெண் போராளிகள் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் அவர்களிடம் சரணடைந்தும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில் புனர்வாழ்வு என்ற பெயரில் வெளியில் வந்தும் விடுதலை தாகத்தை இன்றும் சுமந்து நிற்கின்றார்கள்.

விழிப்படைந்து எழுச்சிகொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும். பெண்கள் சம உரிமை பெற்று சகல
அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக, கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமையவேண்டும் என்ற எமது தேசியத்தலைவரின் சிந்தனையை மனதில் நிறுத்தி தாயகத்தில் அல்லலுறும் பெண்கள் அனைவரின் குரல்களாகவும் போராட்ட சக்தியாகவும் புலம்பெயர் தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் ஈழத்தமிழ்  பெண்கள் மாற வேண்டும் என்று நாம் இன்றைய நாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.

தமிழரின் தலைவிதி தமிழர் கையில்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

இந்துமதி கிருபசிங்கம்
பெண்கள் பண்பாடு மற்றும் பாரம்பரிய அமைச்சர் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
LinkedIn

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.