There were 1,602 press releases posted in the last 24 hours and 222,947 in the last 365 days.

ஈழத் தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் கனடா உலக அளவில் முன்னணி வகிக்கிறது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

"இந்தச் சட்டம் புலம்பெயர்ந்துள்ள தமிழ் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறது என்று ஒன்ராரியோ சட்டமா அதிபா் தெரிவித்தார்"

ரொரன்ரோ - TORONTO, கனடா - CANADA , June 12, 2022 /EINPresswire.com/ --

சட்டமூலம் 104 என்று அழைக்கப்படுகின்ற தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரச் சட்டத்தைப் பாதுகாப்பதில் ஒன்ராறியோவின் சட்டமா அதிபா் கௌரவ. டக் டவுனியின் உறுதிப்பாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ.) பாராட்டுகிறது.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாகப் பிரகடனப்படுத்துகிறது. இந்த வாரத்தில், ஒன்ராரியர்கள் உலக வரலாற்றில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை மற்றும் பிற இனப்படுகொலைகள் பற்றிக் கற்றுக் கொள்ளவும், விழிப்புணர்வைப் பேணவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சட்டம் புலம்பெயர் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறது, அவர்களில் பலர் தற்போது ஒன்ராரியோவில் வாழ்கிறார்கள், மற்றும் இச்சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே மிகுந்த செறிவில் தமிழா்கள் வாழும் சமூகங்களில் ஒன்றாக ஒன்ராரியோ தமிழ் சமூகம் விளங்குகிறது என ஒன்ராரியோவின் சட்டமா அதிபர் தனது வாததத்தில் தெரிவித்தார்.

மே 21, 2021 அன்று ஒன்ராரியோவின் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், கனடா அரசாங்கம் தமிழர்களின் இனப்படுகொலையை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்ற அடிப்படையில், ஒன்ராரியோவின் உயர் நீதிமன்றத்தில்
சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள இச்சட்டத்தைத் தக்க வைப்பதற்கான தனது வாதத்தில் சட்டமா அதிபர், சட்டமன்ற வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டி இவ்வாறு கூறினார்- இறந்தவர்களை மறப்பது, அவர்களை இரண்டாவது தடவை கொலை செய்வதற்குச் சமம் இனப்படுகொலையின் இறுதிக் கட்டம் அந் நினைவுகளை அழித்தல், இழைக்கப்பட்ட தவறுகளை மறுத்தல் மற்றும் ஆதாரங்களை புதைத்தல் ஆதியனவாம், என்பதே, யூத இனப்படுகொலையிலருந்து உயிர் பிழைத்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான எலி வீசலின், பிரபலமான கூற்றாகும், ……மற்றும்
”மிர்கோ க்ர்மெக் ஆல் உருவாக்கப்பட்ட “நினைவேந்தற்கொலை”என்ற பதம் வரலாற்றின் இருண்ட காலங்களை அகற்றுவதற்காக ஆட்சியாளா்கள்
பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சொல்லப்போனால் அது வரலாற்றை மாற்றி எழுதுவதாகும்.”

இந்த ஆண்டு மே மாதம், தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாகக் கடைப்பிடிக்கும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையை நா.க.த.அ. வரவேற்கிறது, மற்றும் இது உலகெங்கிலும் உள்ள பாராளுமன்றங்கள், மாகாண/மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில், இதையொத்த பிரேரணை அல்லது தீர்மானங்களுக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்றும் நம்புகிறது.
நமது மனித வரலாற்றை சதா காலத்திற்குமாக மாற்றியமைத்த கடந்தகால அட்டூழியங்களை நாம் நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது என்று நா.க.த.அ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்காபரோ ரூஜ் பார்க் நாடாளுமன்ற உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி, ஒருமித்த கருத்தை உருவாக்கும் திறனுக்காக, மேற்குறிப்பிட்ட பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததையும் நா.க.த.அ. வாழ்த்துகிறது. ”திரு. ஆனந்தசங்கரி கூறியது போல், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரித்த, உலகின் முதல் தேசியப் பாராளுமன்றம் கனடாவினதாகும். மேலும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பாராளுமன்றத்தின் 2019ம் ஆண்டு பிரேரணையின்படி, சர்வதேச நீதிமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான பொறுப்புக்கூறலை நிலை நிறுத்த, கனடா முன்னணியில் இருக்க வேண்டும்.” என நா.க.த.அ. இன் இனப்படுகொலை மற்றும் பாரிய
அட்டூழியங்களைத் தடுப்பதற்கான அமைச்சர் றோய் விக்னராஜா கூறினார்.

இந்த ஆண்டு மே 18 ஆம் திகதியன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விரிவுரைகளில், ஆர்மேனியாவின் முன்னாள் ஜனாதிபதி கௌரவ ஆர்மன் சர்கிஷன் அவர்களும் நாம் முன்னோக்கி நகர்வதற்கு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அங்கீகாரம் பெறுவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினார்.

** நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி **
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org
இணையத்தள முகவரி: www.tgte-us.org
கீச்சக முகவரி: @TGTE_PMO


Canada takes the global lead in recognizing Eelam Tamil genocide: TGTE
https://www.einpresswire.com/article/575893647/canada-takes-the-global-lead-in-recognizing-eelam-tamil-genocide-tgte

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 416-457-1633
pgmaministry@gmail.com