கனடா பிரதமர் ரூடோ தமிழர்ற்கு நம்பிக்கைதுரோகஞ் வெய்வாரா, இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்தாது பாதுகாப்பாரா?
"கனடா விரும்பினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ - ICC) பாரப்படுத்த அதற்கு இயலும்"
யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப்புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையைசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு கனடாவை வலியுறுத்துவதற்காக ரொறன்ரோவிலிருந்தும் மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள பாராளுமன்ற வளாகம்வரை நூற்றுக் கணக்கான வாகனங்களின் பேரணியானதுநடைபெற்றது.
ஐ.நா. கூட்டத்தொடரிற்கு ஐந்து நாட்கள் மாத்திரமே உள்ளநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இணை-அனுசரணை நாடுகளில் அதிகாரம்மிக்க ஓர் நாடாக உள்ளபோதிலும், பிரதம மந்திரி ரூடோ அவர்களுடைய நிர்வாகமானதுமனித உரிமையுடன் தொடர்புடைய இவ்விடயம் சந்பந்தமாக மௌனமாகவே இருந்து வருகின்றது.
"கனடா விரும்பினால் இலங்கையை சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்த அதற்கு இயலும்" என கார்கள் பேரணியின் எற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"பிரதம மந்திரி ஜஸ்ரின் ரூடோவினுடைய நிர்வாகமானதுதமிழர்களின் ஒருமித்த கோரிக்கையை தீவிரமானதாக ஏற்றுக்கொள்ளுமா அல்லது பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக்கொன்றமைக்காகவும் தமிழ்ப் பெண்களை பாலியல் ரீதியில்துன்புறுத்தி வன்புணர்ச்சியில் ஈடுபட்டமைக்காகவும் சர்வதேசவிசாரணையை எதிர்கொள்வதிலிருந்து இலங்கையைப்பாதுகாக்குமா என்பது பற்றி நாம் அறிந்துகொள்வோம்".
* அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தைமாதம் 12ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ளநிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டுநடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்
* 2011 இல், முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்கள், இலங்கைஅரசாங்கத்தினால் தமிழர்கள் பெருமளவில் கொன்றுகுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் பொருட்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில்(சீஎச்ஓஜீஎம்) வெளிநடப்புச் செய்துள்ளார்.
* சென்ற வாரம், எட்மண்டன் ஸ்ட்ராத்கோனாவுக்கான பாராளுமன்றஉறுப்பினரும், புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டீபீ) பிரதித்தலைவருமாகிய ஹெதர் மெக்பெர்சன் அவர்கள் ஐ.நா. உயர்ஆணையாளரின் அறிக்கையின் முகவுரையையும் உயர்ஆணையாளரின் வேண்டுகோளிலுள்ள பரிந்துரைகளையும்மேற்கோளிட்டு இ-மனு 3168 ஒன்றினை அதிகார பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
* 2019 இல், புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினராகிய செரில் ஹாட்காசில் அவர்கள், பாராளுமன்றத்தில்இலங்கை அரசினால் மேற்கொள்ளபப்பட்டுள்ள இனப்படுகொலைதொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதன் பொருட்டு ஐக்கியநாடுகள் சiபியடம் அழைப்புவிடுக்கின்ற நகர்த்தல் பத்திரமொன்றைக்கொண்டு வந்தார், ரூடோ அரசினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டஅதன் விளைவாக எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப்புரியப்பட்டுள்ள இனப்படுகொலை தொடர்பான தகவல்கள்:
1) இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐநா செயலாளர்நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாதஅறிக்கையின் பிரகாரம், 2009ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின்போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற்போயுள்ளனர்.
2) அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர்அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும்மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர்; வைத்தியசாலைகள்மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள்வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவசிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கு ஏற்பட்டும் மரணித்தனர்.
3) 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக்கருத்திட்டமானது (ஐரீஜேபீ), தமிழ்ப் பெண்கள் “பாலியல்அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால்நடாத்தப்பட்ட “கற்பழிப்பு முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் கையளித்தது.
4) ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாயஅலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்குஅமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூலவிதவைகள் உள்ளனர்.
5) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கானதமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடியஎண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கனேடிய தமிழ் சிவில் சமூகம்
Canadian Tamil Civil Society
+1 4164571633
roytheadvisor@gmail.com
Visit us on social media:
Twitter
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
