தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
தமிழ் அரசியலை சரியான தளத்தில் கொண்டுவந்து விடுவதற்கு இந்தத் தேர்தல் உதவப் போகின்றது. தவறினால் வரலாறு நீண்ட காலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.
JAFFNA, SRI LANKA, November 14, 2019 /EINPresswire.com/ --ஜனாதிபதி தேர்தல் தமிழ்ப் பிரதேசங்களில் தற்போது தான்சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் மன்றம் என்றபெயரில் கருத்தரங்குகளும் இடம்பெறுகின்றன.சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிப்பதா?சஜித்திற்குஆதரவளிப்பதா? என்பது தான் முக்கியமான விவாதப் பொருள். சரி சமனான ஆதரவு இரண்டிற்கும் இருக்கின்றது.
தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிவாஜிலிங்கத்தை ஆதரவளிக்கவேண்டும் என்ற கருத்தே மேலோங்கி வருகின்றது. இந்தவிடயத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு இருப்பதைமறுப்பதற்கில்லை. சிவாஜிலிங்கமும் தன்னால் இயன்ற வரைபிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார். பொதுஅமைப்புக்களையும் தனி நபர்களையும் சந்தித்துவருகின்றார். தான் ஒரு கருவி, குறியீடு மட்டுமே. என்னைக்குறியீடாகவும் கருவியாகவும் கொண்டு தமிழ்த்தேசியஅரசியலை முன்னெடுங்கள் என்றே கூறிவருகின்றார். தேர்தல்பற்றிய பாடல் ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றார்.இணையத்தளங்களில் அப்பாடல் வெளிவந்திருக்கின்றது.
இப்பத்தியாளரும் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும்என்ற கருத்தையே முன்னிறுத்துகின்றார். அதற்கு பலகாரணங்கள் உள்ளன.
1) அதில் முதலாவது தமிழ் மக்கள் ஒருதேசமாக இருக்கின்றோம் என்பதை வெளிக்காட்டுவதாகும்.தேசம் என்பது மக்கள் திரளாகும். தேசியம் என்பது மக்கள்மக்களின் திரளின் கூட்டுப்பிரக்ஞை ஆகும். தேசமாகஎழுச்சியடைவதன் மூலம் தான் கூட்டுப்பிரக்ஞையைபாதுகாக்க முடியும். சுருக்கமாகக் கூறின் தமிழ்த் தேசமாகஎழுச்சியடைவதன் மூலமே தமிழ்த் தேசியத்தையும் அதன் வழிதமிழ் மக்களின் கூட்டிருப்பு, கூட்டுரிமை, கூட்டடையாளம்என்பவற்றையும் பாதுகாக்க முடியும். இவற்றைநிராகரிப்பவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இவற்பை; பேண முடியாது.
2) இரண்டாவது தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளைஉறுதிப்படுத்துவதாகும். நீண்ட காலத்தின் பின்னர் 13 அம்சத்திட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் தங்களதுகோரிக்கைகளை உறுதிப்படுத்திமுன்வைத்திருக்கிறார்கள். இக்கோரிக்கைகள் சர்வதேசரீதியாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் முன்வைக்கும்நியாயமான கோரிக்கைகளாகும். இலங்கைத் தீவின்பல்லினத்தன்மையையும் தேசிய இனங்களின் சுயாதீனத்தன்மையையும் சிங்களத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்இதனை அமூல் படுத்துவது பெரிய விடயமல்ல. இதுவிடயத்தில் தமிழ் மக்களை சேர்த்து வாழவும் தயாரில்லை. தனித்துவிடவும் தயாரில்லை என்றால் தமிழர்கள் என்னகடலுக்குள் விழுந்து சாவதா? தமிழரசுக் கட்சி தானேகைச்சத்திட்ட கோரிக்கைகளை நிராகரித்து சஜித்தைஆதரிக்க முற்பட்டமை மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம். தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக தமிழ்த்தேசம்விலை பேசப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
3) மூன்றாவது வெற்றுக் காசோலை கலாச்சாரத்திற்கு முடிவுகட்டுவதாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரலாற்றுரீதியாகவே ஒரு நினைப்பு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தாம்எதுவும் செய்யாவிட்டாலும் தமிழ் மக்கள் தங்களுக்கேவாக்களிப்பார்களென்று. இந்த நிலமையை மாற்ற வேண்டும்.தமிழ் மக்களின் நலன்களுக்கு உத்தரவாதம் தந்தால்தான்வாக்களிக்க முடியும் என்ற பேரம் பேசலை தமிழ் மக்களும்நடாத்த வேண்டும். இன்று தங்களுக்கான வாக்குகுறையப்போகின்றது என்று அறிந்த உடனேயே தமிழ்மக்களிடம் ஓடி வருகின்றனர். சஜித் பிறேமதாசவின் செயலாளர் இன்று 13 அம்சத்திட்டம் பற்றி கதைப்பதற்கேதயாராக இருக்கின்றார். தமிழ்ப் பொது அமைப்புக்களுடன்இது பற்றிப் பேச முனைகின்றார். தமிழரசுக் கட்சியும்உறுதியாக நின்றிருந்தால் இந்தப் போக்கினைஉயர்த்தியிருக்கலாம். மாறாக அக்கட்சி எல்லாவற்றையும்கவிழ்த்து கொட்ட முனைகின்றது.
இங்கு தென்னிலங்கையில் அதற்கான சூழல் இல்லைஎன்கின்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.தென்னிலங்கையில் அதற்கான சூழலை உருவாக்குவதுஎங்களிடம் வாக்குக் கேட்க வருகின்ற சிங்களக் கட்சிகளின்பணியே ஒழிய எமது பணியல்ல. இன்று இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்புக்குள் ஒரு தீர்வை அடைவதற்கு தமிழ்மக்கள் முன்வந்திருக்கின்றார்கள். அதனைப் பற்றிப்பிடிக்கவேண்டியது சிங்கள தேசத்தின் கடமையேயாகும். ஆயுதப்போரின் முடிவுடன் எல்லாம் முடிவிற்கு வந்துவிட்டது. எனசிங்கள தேசம் நினைத்தால் அதற்கு தமிழ் மக்கள்பொறுப்பில்லை. சிங்கள புலமையாளர் பேராசிரியர்ஜெயதேவஉயான் கொட இக்கோரிக்கைகள் தமிழ் மக்களின்வழமையான கோரிக்கைகள். அவை நியாயமானவை எனக்கூறியிருக்கின்றார்.
4) நான்காவது சிங்கள நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குப்பட்டுள்ளதமிழ் அரசியலை அதிலிருந்து விடுவிப்பதாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா - இந்திய நிகழ்ச்சிநிரலிற்கேற்ப ஆயுதப்போராட்டம் முடிவடைந்த நிலையில்இணக்க அரசியலை முன்னெடுத்தது. இது சிங்களஅரசியலுக்குள் தமிழ் அரசியலை சிக்குப்பட வைத்தது.எந்தவித நிபந்தனையுமில்லாமல் சம்பந்தன் தலைமை ரணில்அரசாங்கத்தை பாதுகாக்க முற்பட்டது. நம்பிக்கையில்லாப்பிரேரணை, மைத்திரியின் அதிரடி ஆட்சிமாற்றம் எனப் பலசந்தர்ப்பங்களில் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்தைபாதுகாத்தது. இதற்கு பிரதிபலனாக கம்பரெலியாவைத்தவிரஎதுவும் கிடைக்கவில்லை.
இந்திய – மேற்குலகக் கூட்டுடன் ஒத்துழைப்பதற்காகவும், சிங்கள ஆட்சியாளர்களை உலகிற்குஅம்பலப்படுத்துவதற்காகவும் ஒரு தந்திரோபாயமாகமுன்னெடுத்ததாக கூட்டமைப்பு நியாயங்கள் கூறலாம். சிங்கக் கொடி பிடித்தமைக்காகவும் நியாயங்கள் கூறலாம்.ஐந்து வருடத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். எதுவும்கிடைக்கவில்லை. இனி திரும்ப வருவது தானே! அவர்கள்வராவிட்டால் அவர்களைக் கழட்டிவிட்டு முன்னேறுவதைத்தவிர வேறு வழியில்லை. தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள நிரலிற்குள்சிக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியலை அதிலிருந்துவிடுவிக்கலாம்.
5) ஐந்தாவது மூடப்பட்ட சர்வதேச வெளியை திறந்துவிடுவதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கஅரசியலை நடாத்துவதற்காக தமிழ் மக்களுக்கான சர்வதேசவெளியை மூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட மிகப் பெரும்பாதிப்பு புலம்பெயர் செயற்பாட்டாளர்களினதும், தமிழகசெயற்பாட்டாளர்களினதும் கைகள் கட்டப்பட்டமையாகும். புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஜெனீவாவில் கால அவகாசம்கொடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்க கூட்டமைப்புகால அவகாசத்தை கொடுத்தது. கனடா அரசாங்கம் மூலம்இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது கூட்டமைப்புஇன அழிப்புக்கு சான்றுகள் இல்லை எனக் கூறியது. தமிழகசெயற்பாட்டாளர்களுக்கும் இவை பற்றிய அனுபவங்கள்நிறைய ஏற்பட்டன. இந்திய மத்திய அரசின் தமிழின விரோதநடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்ப முடியாதவாறுஅவர்கள் தடுக்கப்பட்டனர். கூட்டமைப்பு தமிழ்த் தேசியஅரசியலை பெருந்தேசியவாதத்திற்குள் கரைக்க முற்பட்டது.இதற்கு சர்வதேச செயற்பாடுகள் தடையாக இருக்கும்.என்பதனாலேயே சர்வதேச வெளியை மூடியிருந்தனர்.
மறுபக்கத்தில் சர்வதேச அரசியலை மேற்கொள்ளுதல் என்பதுதமிழ் அரசியலைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகஇருந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அடிக்கடி கூறுவார்.“தேசியப் போராட்டம் தேசிய அரசியலினால்தான் உருவாகும்.தேசிய அரசியலினால் தான் வளரும். ஆனால் தேசியப்போராட்டத்தின் வெற்றியை சர்வதேச அரசியலேதீர்மானிக்கும்.” இன்னோர் பக்கத்தில் இன்று இலங்கைத் தீவுசர்வதேச அரசியலுடன் இறுக்கமாகப்பிணைக்கப்பட்;டுள்ளது. அதுவும் ஐ.எஸ் இயக்கத்தின்குண்டு வெடிப்புடன் அதிகளவு தீவிரமாகியுள்ளது.இந்நிலையில் தமிழ் மக்களும் சர்வதேச அரசியலைநடாத்துவதற்கு தயாராக வேண்டும். அதற்கான வெளிநாட்டுக்கொள்கையை உருவாக்க வேண்டும். இராஜதந்திர லொபியைஉருவாக்க வேண்டும். மூடப்பட்ட சர்வதேச வெளியைதிறக்காமல் இவற்றை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது.
இது விடயத்தில் வேறு தேசிய இனங்களுக்கு இல்லாதசாதகமான நிலை தமிழ் மக்களுக்கு உண்டு. புலம்பெயர்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இதற்கு காரணமாவர். வலிமையான நிலையில் புலம்பெயர் தமிழர்கள்இருக்கின்றனர். அமெரிக்கா உட்பட மேற்குலக அரசுகளுடன்வலிமையான ஊடாட்டங்களை அவர்களால் மேற்கொள்ளமுடியும். கனடா பாராளுமன்றத்திலும் ஒன்றாரியோ மாகாணபாராளுமன்றத்திலும் இன அழிப்புத் தீர்மானத்தை அவர்கள்நிறைவேற்றியுள்ளனர். புலம்பெயர் அமைப்புக்களைஇணைத்து அண்மையில் ஒரு மாநாட்டினை சுவிஸ் அரசாங்கம்கூட்டியுள்ளது. இதே போல தமிழ்நாடு அரசு இன அழிப்பு தீர்மானம், பொது வாக்கெடுப்புத் தீர்மானம் என பலவற்றைநிறைவேற்றியுள்ளது. இது தமிழகச் செயற்பாட்டாளர்களின்முயற்சியினால் கிடைத்தவையாகும். சற்று முயற்சிப்போமாகஇருந்தால் உலகெங்கும் வாழும் தமிழக வம்சாவழித்தமிழர்கள் குறிப்பாக மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசீயஸ்போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களையும் எமக்குப் பின்னால்அணிதிரட்ட முடியும்.
இதற்குப் புறம்பாக உலகிலுள்ள முற்போக்கு ஜனநாயகசக்திகளையும் அணிதிரட்ட முடியும். ஒரு சிறிய தேசிய இனம்தனது வெற்றிக்கு அக ஆற்றலை மட்டும் நம்பியிருக்க முடியாது.இயன்றளவு புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.உலகத் தமிழர்களும், உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளும்இப்புற ஆற்றலை வளர்ப்பதற்கு மிகவும் துணையாக இருப்பர்.
6) ஆறாவது பூகோள அரசியலில் பங்காளிகளாக மாறுவதாகும்.இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு புவிசார் அரசியல்போட்டி அமெரிக்க, இந்திய மேற்குலக கூட்டிற்கும் சீன, பாகிஸ்தான் கூட்டிற்கும் இடையே இடம்பெறுகின்றது என்பதுநாம் அனைவரும் அறிந்த விடயம். புலிகள்அழிக்கப்பட்டமைக்கும், மகிந்தர் வீழ்ச்சியடைந்தமைக்கும்இன்று மகிந்தர் மேலெழுவதற்கும் இப்புவிசார் அரசியலேகாரணமாகும். இன்றைய ஜனாதிபதி தேர்தலைக் கூட இவ்விருஅணிகளுக்குமிடையேயான போர் என வர்ணிக்கும்ஆய்வாளர்களும் உண்டு.
விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்ட காலத்தில் தமிழ்மக்கள் புவிசார் அரசியலில் கௌரவமான பங்காளிகளாகஇருந்தனர். தமிழ் மக்களின் விவகாரத்தை கைவிட்டுவிட்டுஎதுவும் செய்ய முடியாத நிலையில் வல்லரசுகள் இருந்தன.அதிகார சமநிலையிலும் கௌரவமான பங்கு இருந்தது. இன்றுவல்லரசுகள் எமது தலைமையை பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு புவிசார் அரசியல் மைதானத்திலிருந்து தமிழ்மக்களைத் துரத்தி விட்டுள்ளன. தமிழ் மக்கள் மீளவும் புவிசார்அரசியலில் பங்காளிகளாக மாற வேண்டும். ஜனாதிபதிதேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம்இதனைச் சாத்தியமாக்க முடியும்.
மொத்தத்தில் தமிழ் அரசியலை சரியான தளத்தில் கொண்டுவந்து விடுவதற்கு இந்தத் தேர்தல் உதவப் போகின்றது. தமிழ்மக்கள் இந்த உண்மையை தரிசிக்க தவறினால் வரலாறுநீண்ட காலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்காது.
சி. அ. ஜோதிலிங்கம்
அரசியல் ஆய்வாளர்
தேர்தல் பற்றிய பாடல்:
https://www.facebook.com/100000200527744/posts/3070700332946621/?sfnsn=mo&d=n&vh=i
சி. அ. ஜோதிலிங்கம்
அரசியல் ஆய்வாளர்
+94 71 801 9175
email us here
Visit us on social media:
Facebook
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
