There were 354 press releases posted in the last 24 hours and 431,046 in the last 365 days.

இனப்படுகொலைக்கான நீதியை வென்றடைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய முன்முனைப்பு

TGTE Logo5

NEW YORK, UNITED STATES OF AMERICA, April 4, 2019 /EINPresswire.com/ -- பன்னாட்டுச் சட்டங்களுககு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலைநாட்டும் பொருட்டு Victim Driven International Justice - (VDIJ) எனும் நீதிக்கான முன்முயற்சியைத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இதற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த முன்முனைப்பு குறித்து ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த முன்முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


இந்த முன்முயற்சி தொடர்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:


1) பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், பன்னாட்டுச் சட்டங்களின்படி உண்மைகளை அறியும் உரிமையையும், தெரிந்து கொள்வதற்கான உரிமையையும் பயன்படுத்தி, இதன் அடிப்படையில், ஐ.நா பொதுச் செயலரும், ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர்களால் சிறிலங்காவில் இழைக்கப்பட்ட பன்னாட்டுச் சட்டக் குற்றங்கள் குறித்து நடத்திய தற்சார்பான மூன்று புலனாய்வுகளில் திரட்டிய தகவலைத் தெரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று கேட்கவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் இந்தத் தகவலை நாம் பகுத்தாய்ந்து கொண்டுசேர்க்கவுள்ளோம். இவ்விதம் அவர்கள் தங்கள் உறவுகளுக்கு என்ன நேரிட்டது என்பதை இறுதியில் அறிந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டும்.

இந்தத் தகவல் பெறுவதில் எமக்கு உதவுவதற்கும் தெரிந்து கொள்வதற்குமான உரிமையிலும் உண்மையறியும் உரிமையிலும் தேர்ச்சிபெற்ற பன்னாட்டுச் சட்டத்தரணிகளை நாம் அமர்த்தியுள்ளோம்.

இது தொடர்பில் ஐ. நா.மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசேல் பசலே ஜெரியா அம்மையாருக்கு முறையாக தெரிவித்துள்ளோம்.

நாம் பணிக்கு அமர்த்தியுள்ள பன்னாட்டுச் சட்டவாளர்கள் ஐ.நா ஆணையாளரை முறைப்படி அணுகி, அவர் வயமுள்ள 'தற்சார்பான மூன்று புலனாய்வுகளில் திரட்டிய தகவலைல்களை' அறிய வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளனர்.


2) பன்னாட்டுக் குற்ற வழக்குகள் பலவற்றில் புலனாய்வையும் வழக்குத் தொடுகையையும் முன்னின்று நடத்திய பன்னாட்டு வழக்கறிஞர் ஒருவரின் சேவைகளையும் நாம் அமர்த்தியுள்ளோம். அவரும் அவரின் குழுவினரும் தமிழ்ச் சட்டத்தரணிகளின் உதவியோடு இத் தகவலை மீளாய்வு செய்து, சான்றியக் கட்டுகளை ஒழுங்கமைப்பார்கள்.


3) 90க்கும் மேற்பட்ட ஐ. நா.உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டுச் சட்டங்களில் தனியார் வழக்குத் தொடுகைகளுக்கான வழிவகைகளைக் கொண்டுள்ளன.

அந்தநாடுகளில் வாழும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் செயற்படும் மனிதவுரிமை அமைப்புகளும் அனைத்தளாவிய மேலுரிமை(universal jurisdiction) கொண்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு உள்நாட்டு வழக்குகள் தொடுப்பதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் தருவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் Victim Driven International Justice - (VDIJ) முன்முனைப்பு குறித்தான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English: https://www.einnews.com/pr_news/480893922/tgte-announces-victims-driven-international-justice-initiative-unhrc-s-latest-sri-lanka-resolution-failed-tamil-victims

Twitter: @TGTE_PMO

Email: r.thave@tgte.org

Web: www.tgte-us.org

Web: www.tgte.org

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Google+

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.