There were 1,874 press releases posted in the last 24 hours and 399,208 in the last 365 days.

கொட்டும் மழையிலும் மைத்திரிக்கு எதிராக ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்கள் !!

இலங்கை அதிபர், ஒரு சந்தேகத்திற்குரிய போர்க்குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை செய்திருந்தது.

UNITED NATIONS, NEW YORK, UNITED STATES OF AMERICA, September 26, 2018 /EINPresswire.com/ --

ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றச் சென்றிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரபால சிறிசேனாவுக்கு எதிராக கொட்டும் மழையிலும் தமிழாகள் ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளனர்.

போர்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு புதிய யோசனை ஒன்றினை அனைத்துலக சமூகத்தின் முன், தான் வைக்க இருப்பதாக சிறிலங்கா அதிபர் முன்னறிவிப்பு செய்திருந்த நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

முன்னராக இலங்கை அதிபர், ஒரு சந்தேகத்திற்குரிய போர்க்குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்துலக ஊடகங்களுக்கும் முன்கூட்டியே நாடுகடந்த தமிழீழ அரசாங்:கம் எச்சரிக்கை செய்திருந்தது.

இலங்கைத்தீவின் இறுதி யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்கள் உட்பட ஐந்து முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக இலங்கை அதிபர் சிரிசேன இருந்த போது அவரின் இராணுவக் கட்டளைப்பொறுப்பில் அண்ணளவாக 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற ஐ.நாவின் மதிப்பாய்வு அறிக்கையை ஆதரமாக கொண்டு முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.

உலகில் தொடரும் இனப்படுகொலைகளுக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே வித்திட்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

Hundreds Protest Against Sri Lankan President at UN: Shouting Where are our Babies who surrendered? TGTE.
"These Babies Surrendered along with their families at the end of the war in May 2009, when Sri Lankan President was acting as Defense Minister"
https://www.einpresswire.com/press-releases/preview/2544597

Contact: r.thave@tgte.org

நாதம் ஊடகசேவை

நாடுகடந்த தமிழீழ அரசாங்:கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-614-202-3377
email us here