சிறிலங்கா விவகாரத்தில் அடுத்து என்ன ஐ.நாவில் இடம்பெற்ற உப மாநாடு !!
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்துவன் ஊடாகவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிறிலங்காவை பொறுப்புக்காண வைக்க முடியும்
GENEVA, SWITZERLAND, September 24, 2018 /EINPresswire.com/ --சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையவுள்ள நிலையில் அனைத்துலகத்தின் அடுத்த நிலைப்பாடு என்பதனை கேள்விக்குட்படுத்தும் வகையில் உப மாநாடு ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் அவை ஆகியன பசுமைத்தாயகம் ஊடாக ஒருங்கு செய்திருந்தன.
ஆங்கிலம் பிரென்சு மொழியில் இடம்பெற்றிருந்த இம்மாநாட்டில் பிரான்சு-தமிழ் இளையோர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட காணொளி விபரணம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது.
Mr Lorenzo Fiorito அவர்கள் மாநாட்டை தொகுத்திருக்க வள அறிஞர்களான Mrs Shivani Jegarjah, Mrs Sowjeya Joseph, Mrs Sharuka Thevakumar, Hon Minister Manivannan ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்துவன் ஊடாகவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிறிலங்காவை பொறுப்புக்காண வைக்க முடியும் என்ற கருத்து அனைத்துலக நாடுகள் நோக்கி முன்வைக்கப்பட்டது.
https://youtu.be/cB_UOoKJzzo
நாதம் ஊடகசேவை
Transnational Government of Tamil Eelam
TGTE
+41-79-943-2420
email us here
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.
