There were 501 press releases posted in the last 24 hours and 206,960 in the last 365 days.

146 679 : இது சிறிலங்கா அரசை விடாது துரத்தும் அச்சரேகை !! - சுதன்ராஜ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்தும் http://youarenotforgotten.org/ எனும் இணையத்தளம் ஒன்று செயற்பட தொடங்கியுள்ள விடயம் முக்கியமான ஒன்றாகவுள்ளது

PARIS, FRANCE, September 5, 2018 /EINPresswire.com/ --

இது வெறும் இலக்கங்களின் கூட்டு அல்ல. ஒவ்வொரு இலக்கங்களின் பின்னாலும் ஒரு உயிர் உண்டு. அதாவது 'ஒரு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து அறுநூற்றி எழுபத்தி ஒன்பது' உயிர்கள்.

இது. இலங்கைத்தீவின் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற ஒரு எண்ணிக்கை.

2008-2009ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் வன்னிப்பெரு நிலப்பரப்பில் போர் சூழலுக்குள் இருந்தவர்களுக்கும், பின்னர் அங்கிருந்து வெளியே வந்தவர்களுக்கும் இடையில் காணப்பட்ட 'வெளியின்' அடிப்படையில் இத் தொகை கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது 146 679 பேரே அந்த 'வெளியாகும்'.

உள்ளிருந்தவர்கள், வெளியே வந்தவர்கள் யாவுமே சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்களாகும்.

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆஜர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களே, இதனை ஆதாரபூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

சிறிலங்கா அரசை விடாது துரத்தும் கறுப்பாக, இந்த எண்ணிக்கை 146 679) இது இருக்கின்றது எனில், காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரமும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடியாகவே உள்ளது.

வெள்ளை வான்களிலும், காவல் அரண்களிலும், விசாரணைக் அழைத்துச் செல்லப்பட்டதிலும் என பல்வேறு வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உச்சமாக, போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பலர் எங்கே என்பது முக்கிய கேள்வியாக இலங்கை அரசினை நோக்கியுள்ளது.

இவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல. இவ்வர்கள் 'ஆக்கப்பட்டவர்கள்' என்ற வகையில் இதற்கான 'பொறுப்புக்கூறலை' ஏற்க வேண்டிய நிலையே இலங்கை அரசுக்கு அச்சங்கொடுக்கின்ற ஒன்றாக மாறியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் நீதிக்கான தொடர் போராட்டம், தமிழர் தாயகம் எங்கும் ஓயாத உணர்ச்சிக்குரலாக ஒலித்துக் கொண்டேயுள்ளது. இப்போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தாய்மார்களவும் பெண்களாகவும் உள்ளனர்.

இது ஆர்ஜென்ரீனாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லியிரக்கணக்கானவர்களை தேடும், தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்தை ஞாபக்கப்படுத்தும் ஒன்றாக உள்ளது.

இலங்கைத்தீவுக்கு பயணம் செய்கின்ற ஒவ்வொரு சர்வதேச பிரநிதிகளின் வாயில்களிலும் இத்தாய்மார்களின் கண்ணீர்குரல், அனைத்துலக சமூகத்தின் நீதியைக் கோரி நிற்கின்றது. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையிலும் இதற்கான இலங்கைத்தீவில் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டு வருகின்றது.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் இக்குரலையே பிரதிபலித்திருந்தன.

'இராணுவத்திடம் ஒப்பட்டைக்கப்பட்ட எவரும் இன்று உயிருடன் இல்லை' என கூறியுள்ள இலங்கையின் பிரதமர் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே,அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதுபற்றி தகவல் தர மறுத்ததுள்ளதுடன், சிறிலங்கா படைத்தரப்பை காப்பாற்றிக் கொள்வதிலேயே கருத்தாயிருக்கின்றார் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர் மட்டுமல்ல சிறிலங்கா அரச தரப்பினர் யாவருமே படைத்தரப்பை காப்பாற்றிக் கொள்ளவதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

ஆனாலும் நீதிக்கான குரல் ஒலித்துக் கொண்ட இருக்கின்றது.

இந்நிலையில்தான் சமீபத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்துக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவாகரத்தினை கையாள ஒரு அலுவலகத்தை நிறுவியுள்ளது.

இது, ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைக்களுக்கு முரணாக, பாதிக்கப்பட்ட தரப்பின் கருத்துக்களையோ, அனைத்துலக வல்லுனர்களின் பங்களிப்பையோ ஏதுமன்றி, அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு மாறான, தன்னிச்சையாக ஒன்றை நிறுவி அதற்கான பிரநிதிகளையும் இலங்கை அரசாங்கம் அமர்த்தியுள்ளது மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

நீதிக்காக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் முற்றாக இதனை நிராகரித்துள்ளனர். இது அனைத்துலகத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என கூறுகின்றனர்.

சிறிலங்கா அரசு இவ்வாறான ஆணைக்குழுக்களை நியமிப்பது புதிதல்ல. கடந்த காலங்களிலும் பல ஆணைக்குழுக்களை நியமித்துள்ளது.

1994-1998-2006-2013 ஆகிய காலகட்டங்களில் பல்வேறு பொறிமுறையில் ஆணைக்குழுக்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை யாவுமே எந்த அதிகாரமும் அற்ற விசாரித்து வாக்குமூலங்களை பெறுகின்ற ஆணைக்குழுக்களாவே இருந்துள்ளன.

இந்த ஆணைக்குழுக்கள் தொடர்பில் இரு ஆணைக்குழுக்களில் செயலராக பணியாற்றியிருந்த எம்.சி.எம். இக்பால் அவர்கள் சமீபத்தில் இந்த ஆணைக்குழுக்களில் உள்ளார்ந்து தான் அவதானித்த விடயங்களை கட்டுரையொன்றின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

'இவ்வாணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறித்த காலத்தில் பல பாரிய புதைகுழிகள் பற்றிய விபரங்களும், சித்திரவதை முகாம்கள் பற்றிய விபரங்களும் உள்ளன. இது தொடர்பில் அவ்வகையிலான புதைகுழிகளுக்கு அருகாமையில் வசித்தவர்களும் சித்திரவதைக்குள்ளாகி உயிர் தப்பியவர்களின் சாட்சியங்களும் உள்ளன. அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்களும் பதியப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இதுவரையில் இவ்விடயங்கள் தொடர்பில் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என அவர் குறிப்பிட்டுள்ள விடயம் மிக முக்கியமானது.

அதாவது சிறிலங்கா அரச தரப்பு நியமிக்கின்ற ஆணைக்குழுக்களின் நிலைமை. சிறிலங்கா அரசின் முப்படைகளுக்கும் அதிபொறுப்பானவர் ஜனாதிபதியே என்ற நிலையில், தனது அதிகாரத்துக்கு உட்பட்ட படையினர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை காப்பாற்றுகின்றவாகவே இருக்கின்றார் என்பதனைத்தான் எம்.சி.எம். இக்பால் அவர்களுடைய கூற்று மெய்பிக்கின்றது.

தற்போது ஆட்சியில் அமர்ந்நிருக்கின்ற மைத்திரியே போரின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் அக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அவர் மட்டுமன்றி அவருக்கு கீழ் இருந்த, இருக்கின்ற படையதிகாரிகளும் உள்ளனர்.

இது வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல், குற்றவாளியே குற்றங்களை விசாரிப்பதாக உள்ளது. இது சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கே உரிய வேடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு போரின் போது கொல்லப்பட்டவர்களாக கருதப்படுகின்ற 146 679 பேருக்கு மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதிலையும் கூற வேண்டிய இடத்தில் சிறிலங்கா அரசு உள்ளது.

இதற்கான 'பதில்' சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் தெரிந்த பதிலை கூறுமிடத்து அதற்கான பொறுப்புக் கூறலை ஏற்கவேண்டிய நிலையே, ஆட்சியாளர்களை விடாது துரத்தும் கறுப்பாக உள்ளது.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்தும் http://youarenotforgotten.org/ எனும் இணையத்தளம் ஒன்று செயற்பட தொடங்கியுள்ள விடயம் முக்கியமான ஒன்றாகவுள்ளது.

தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இவ்வகையான இணையத்தளங்கள் காணப்படுகின்றன. அவ்வகையில் இது காலத்தின் சாட்சியாக காலத்துக்கு காலம் ஈழத்தமிழர்களின் நினைவிற் கொள்ள வேண்டிய ஒன்றினை ஆவணப்படுத்துவதாகவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர், வதிவிடம், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டனர் போன்ற விவரங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களர் இத்தளத்தில் நேரடியாகவே தரவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டதற்கான பொறுப்புக் கூறலை சிறிலங்கா ஏற்று தமிழர்களுக்கு பரிகாரநீதியை வழங்காதவரை, இந்த தளத்தில் தொங்கும் ஒவ்வொரு ஒளிப்படங்களும், சிறிலங்கா ஆட்சியாளர்களை விடாது துரத்தும் அச்சரேகையாகவே காலத்துக்க காலம் இருக்கும்.


Contact: sutharsansivagurunathan@gmail.com

சுதன்ராஜ்
Suthanraj
+33-755-168-341
email us here