There were 1,857 press releases posted in the last 24 hours and 400,037 in the last 365 days.

"நாங்கள் உங்களை மறவோம் - You Are Not Forgotten" : காணாமலாக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் இன்று !!

நாங்கள் உங்களை மறவோம் - You Are Not Forgotten"

காணமலாக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்து பொருட்டு http://youarenotforgotten.org/எனும் இணையம் இயங்கத் தொடங்கியுள்ளது.

COLOMBO, SRI LANKA, August 29, 2018 /EINPresswire.com/ --

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் (August 30) இன்றாகும். இந்நாளில் உலகின் பல பாகங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவேந்து அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இந்நாள் இலங்கைத்தீவில் ஒரு முக்கியமானதொரு நாளாக காணப்படுகின்றது.

காரணம் உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் இலங்கைத்தீவில் வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்;களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

துயர் நிறைந்த இப்பக்கங்களை ஆவணப்படுத்தவும், நீதிக்கான போராட்டத்திற்கு வலுவாகவும் காணமலாக்கப்பட்டவர்களை அவர்தம் உறவுகளால் அடையாளப்படுத்து பொருட்டு http://youarenotforgotten.org/எனும் இணையம் இயங்கத் தொடங்கியுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விபரங்களை அடங்கிய பல இணைய ஆவணங்கள் இயங்கி வரும் நிலையில், இலங்கைத்தீவில் காணமலாக்கப்பட்ட தமிழர்களுக்கென தனித்து இயங்கத் தொடங்கியுள்ள இந்த இணையத்தளம் முக்கியமானதாக உள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் பெயர், வதிவிடம், எவ்வாறு காணாமல் ஆக்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர், வதிவிடம், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டனர் போன்ற விவரங்களை, உறவினர்கள், நண்பர்கள் இத்தளத்தில் நேரடியாகவே தரவேற்றம் செய்து கொள்ளக் கூடியதாக அமைகின்றது.

Transnational Government of Tamil Eelam
TGTE
+1-614-202-3377
email us here