There were 1,621 press releases posted in the last 24 hours and 413,553 in the last 365 days.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையிலிருக்க வேண்டும்! காலத்தின் கட்டாயம் அது, காலத்தின் தேவையும் அதுவே

TORONTO , CANADA , February 28, 2018 /EINPresswire.com/ --

தமிழரின் தலைவிதி தமிழரின் கையிலிருக்க வேண்டும்! காலத்தின் கட்டாயம் அது, காலத்தின் தேவையும் அதுவே:

நீதி கோரும் விடயத்திலோ, ஓர் அரசியல் தீர்வை அடையும் விடயத்திலோ நிச்சயமாக சிறிசேனவையோ, அல்லது ரணிலையோ, ராஜபக்சவையோ நம்பி இருக்கேலாதென்ற உண்மையை உணர்ந்து, ஒற்றுமொத்த தமிழ் நலம் விரும்பிகள் எல்லோரும் ஒன்றுகூடி இனிமேல் தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் என்ற கோட்பாட்டை சர்வதேசத்திற்கு புரிய வைக்கவேண்டும். அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியும் கூட.

தமிழர்களே, தமிழருக்கு அதிகார பலத்தை கொடுக்கும் தகுதி, உடையவர்!

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரித்தாணியாவிலும் தாயகத்திலும் நடந்த சம்பவங்கள் பல உண்மைகளை வலியுறுத்தின.

1. மாசி 4 ஆம் திகதி அன்று ஸ்ரீலங்கா தூதரகத்தை சேர்ந்த, இராணுவ அதிகாரி, பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தமிழருக்கு விடுத்த மரண அச்சுறுத்தலுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்க முதல் அவர் ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது.

2. மாசி 10 ஆம் திகதி அன்று நடந்த தாயக உள்ளூராட்சி தேர்தலுக்கு பின் சிங்கள கூட்டணி அரசாங்கம் நிலை குலைந்த நிலையில், தமிழின அழிப்புக்கு நீதி கோருவதற்கு வழி, ஓர் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) அல்லது சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணை (International Criminal Court) ஒன்றே என்பதே. அதுவே தமிழரின் ஒற்று மொத்த முடிவாய் இருக்க வேண்டியது.

மாசி 4 ஆம் திகதி அன்று ஸ்ரீலங்கா தூதரகத்தை சேர்ந்த, இராணுவ அதிகாரி, பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ தமிழருக்கு விடுத்த மரண அச்சுறுத்தல்:

70 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா கொடுத்த சுதந்திரமானது, தமிழருக்கு சுதந்திரத்தை வளங்கவில்லை என்று, சனநாயகத்த்தின் பிறப்பிடமாகிய பிரித்தானிய பூமியில், ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன்னே, Tamil Solidarity தலைமையில் ஓர் அமைதி போராட்டத்தை நடத்திய தமிழருக்கு, ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பெர்னாண்டோ, அவர்களின் கழுத்தை அறுப்பதை போன்ற சைகையை மீண்டும் மீண்டும் கைகளினால் காட்டிய காட்சி, தமிழ் உலகத்தை மட்டுமல்ல பல சிவில் சமூக உறுப்பினரையும், மனித உரிமை ஆலோசகர்களையும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும், திடுக்கிடச் செய்தது. அதன் விளைவாக பிரித்தானிய வெளிஊர் அமைச்சர், உயர் மட்ட தொடர்புகள் மூலம், கண்டனம் தெரிவித்து, பெர்னாண்டோவின் பதவி இடை நிறுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா வெளிஊர் திணைக்களத்திற்கு விண்ணப்பித்த செய்தியை கேட்டறிந்தோம். அது சனாதிபதி சிறிசேனாவால், விசாரணை நடத்தாததை காரணமாய் கொன்று, நிராகரிக்கப்பட்டு, பெர்னாண்டோ ஸ்ரீலங்கா தூதரகத்தில் ராணுவ அதிகாரியாய் திரும்பவும் அமர்த்தப்பட்டார் என்பதையும் அறிந்தோம்.

பெர்னாண்டோவின் கொடூரச்செயல் அவரும் அவருடைய சகாக்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொள்ளையின் போது தமிழருக்கும் செய்த கழுத்தறுப்பு செயல்களை பிரதிபலித்தது என்ற அதிர்ச்சியான செய்தி காணொளி ஆதாரங்களுடன் வெளிவந்தது. ITJPsl குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 59ஆம் பிரிவை சேர்ந்த பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா இராணுவம் முல்லைத்தீவில் மருத்துவ மனைகள் மீது ஏவிய குண்டு வீச்சு தாக்குதல்களில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந்தார் என்பதும் அம்பலமாகியது. அவர் அப்படி ஈடுபடவில்லை என்றால் அதை எதிர்ப்பதற்கு அவருக்கு நீதிமன்றத்தில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அக்குழு வலியுறுத்தியது.
தூதரகத்தின் முன் போராட்டம் செய்த தமிழர்கள் மீது தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதை பற்றியும் இந்த விதமான நடை முறைகள் வழக்கமாய் நடந்துகொண்டு வருவதை பற்றியும் ITJPsl தெரிவித்தத.

இது இருக்க, பிரித்தானிய வெளி விவகார மற்றும் காமன்வெல்த் அலுவலகமோ, ஸ்ரீலங்காவோ, ஐநா மனித உரிமை மன்றத்தின் ஸ்ரீலங்காவை ஒட்டிய பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை தீர்மானம் (30/1) பிரகாரம், ஸ்ரீலங்காவுக்கு வெளியே அனுப்பப்படும் இராணுவ அதிகாரிகள் மேல் போதிய அளவு ஆராய்ச்சிகள் மேட்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி ஆக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தது.
ஸ்ரீலங்கா சனாதிபதி மட்டுமல்ல பல அமைச்சர்களும் பெர்னாடோவின் கொடூரச்செயல்களை ஆதரித்து, இயக்கத்தின் வெளிஊர் அமைப்புகள் தங்களுக்கு பணம் சேர்ப்பதற்கு செய்த செயற்பாட்டாகவே அந்த ஆர்ப்பாட்டம் இருந்தது என்று, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரை அவமதிக்கும் விதத்தில் அவர்கள் பதில் இருந்தது. பெர்னாண்டோ, புலிக்கொடிக்கெதிராய் ஸ்ரீலங்கா சிங்கத் சின்னத்தை பெருமையுடன் சுட்டிக்காட்டியதை மெச்சி, அவர் செய்ததை ஆமோதித்தார்கள்.

சிறிசேனவின் நடவடிக்கையால் வெறுப்புண்ட பிரித்தானிய புலம்பேர் தமிழ் அமைப்புகள் எல்லோரும், அதற்கெதிராய் குரல் கொடுத்து, ஓர் பேர்போன சட்டத்தரணியை கொண்டு, பெர்னாண்டோ ‘persona non grata’ என்று பிரகடனப்படுத்தப்படல்வேண்டும் என்றும், பிரித்தானிய சட்டங்களை மீறியதற்கு கைது செய்யப்பட்டு அவருக்கெதிராய் வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும், போர் குற்றங்களுக்காக அவர் விசாரணைக்குளாகப்பட வேண்டுமென்றும், ராஜதந்திரி என்ற முறையில், பிரித்தானிய தூதரகத்தில் கடமை ஆற்றும் உத்தியோகத்தருக்கு அவர்கள் செய்யக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கெதிராய் வழக்குகள் தொடராது, அவர்களுக்கு வழக்கமாய் கொடுக்கப்படும் பாதுகாப்பை (diplomatic immunity) மீள பெறவேண்டும் என்றும், பிரித்தானிய வெளிஊர் அமைச்சருக்கு ஓர் கடிதம் எழுதினர்.

அத்தோடு இன்னுமோர் பெரிய ஆர்ப்பாட்டத்தை மாசி 9 ஆம் நாளில் நடத்தினர்:
"பிரித்தானிய வரலாற்றில் முதல் முறையாக மகாராணியாரின் அரண்மனை வழியாக ஈழத் தமிழர்களின் ஆர்ப்பாட்டம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராணியார் இந்த போராட்டத்தை அரண்மனையில் இருந்த படி நேரடியாக பார்த்துள்ளார். கழுத்தை வெட்டுவேன் என கூறிய சிங்கள அதிகாரிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் இது," என்று ஓர் தமிழ் மகன் அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி ட்விட்டரில் எழுதினார்!

கனடாவிலும் - திரு பகவத் சிங்கம் அவர்களும், திரு M K தமிழ் அவர்களும், திரு M K ஈழவேந்தன் அவர்களும் - தமிழ் தாய் மன்றம், கந்த முருகேசனார் தமிழ் கலாச்சார மையம் கனடா, நாடு கடந்த அரசாங்கம் சார்பாக தங்கள் முழு ஆதரவை பிரித்தானிய தமிழருக்கு நல்கும் முகமாக டொரோண்டோவில் பிரித்தானிய தூதரக Consul Generalக்கு ஒரு மனுவை பிரதி Consul Generalளிடம் கைஅளித்தார்கள்.

இது இவ்வண்ணம் இருக்க, பெர்னாண்டோவிற்கு எதிராய் நடவடிக்கை எடுக்க முதல் அவர் ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றார் என்ற தகவல் வந்தவுடன் அவர் திரும்பவும் வட கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பப்படுவார் என்பதை நினைக்கும் போது தமிழ் மக்களுக்கு என்ன ஆபத்து நேரிடுமோ என்ற பயம் தமிழரிடையே உண்டாகியுள்ளது.

மாசி 10 ஆம் திகதி அன்று நடந்த தாயக உள்ளூராட்சி தேர்தல்:
நடந்த உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது சனாதிபதி சிறிசேன சிங்கள மக்களுக்கு சொன்னது எங்களை சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளி விட்டதென்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா ஆகியோர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சொன்னதை அவர் ஏற்கவில்லை என்றும், அந்நிய நீதவான்களை, வழக்கு தொடுப்பவர்களை, வழக்கறிஞர்களை சேர்ப்பதையும் மற்றும் தன் இராணுவத்தை குற்றவாளிகள் ஆக்குவதையும் விடமாட்டார் என்றும் அதனால் தான் மங்கள சமரவீர வெளிநாட்டு அமைச்சராய் பதவி நீக்கம் செய்யப் பட்டார் என்றும் சனாதிபதி சிறிசேன உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது சிங்கள மக்களுக்கு சொன்ன அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
கடுமையான வரையறைகள் இல்லாத, இரண்டு வருட கால அவகாசம் கொடுத்ததெல்லாம் வீணாகி போய்விட்டது என்பது இப்ப சுமந்திரனுக்கு புரிந்திருக்க வேண்டும்.

உள்ளூர் ஆட்சி தேர்தலுக்கு பின் அரசியல் நிலைமை குழம்பி இருக்கும் நிலையில் சர்வதேச விசாரணை பொறிமுரைக்கு சுமந்திரன் அழைப்பு விடுப்பாரா என்ற கேள்விக்கு அவரே பதில் கூறி உள்ளார். எதிர் வரும் ஐ நா மனித உரிமை மன்றத்தின் 37ஆம் அமர்விற்கு முன், ஸ்ரீலங்காவை ஒட்டிய பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை தீர்மானத்தை (30/1) பற்றி பிரித்தானிய ஜெனீவா அலுவலகத்தில் மனித உரிமை பேரவையின் 27 உருப்பு நாடுகளை கொண்ட 40 நலம்விரும்பிகள் பங்குபற்றிய ஓர் கூட்டத்தில், சுமந்திரன் ஸ்ரீலங்கா சொல்லப்பட்ட காலத்தில் (இன்னும் ஒரு வருடம் மிஞ்சி இருக்கும் நிலையில்) தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டுமென்ற கருத்தை முன் வைத்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சுமந்திரன் தீர்மானத்தை (hrc 30/1) நடைமுறைக்கு கொன்டுவர ஸ்ரீலங்கா ஒன்றுமே செய்யாததை காரணமாக் கொண்டு, மனித உரிமை பேரவை சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்க வேண்டும் என்று சொல்ல மறுத்து விட்டார் என்பதை நினைக்கும் போது ஒரு நல்ல தருணத்தை கைவிட்டு விட்டார் என்பதை மறுக்க ஏலாது.

உள்ளூர் ஆட்சி தேர்தலுக்கு பின் சிங்கள கூட்டணி அரசாங்கம் நிலை குலைந்த நிலையில், இடைக்கால அறிக்கையின் படி சுமந்திரன் சொன்ன விளக்கத்தின் பிரகாரம் உருவாக்கப் பட இருக்கும் அரசியல் யாப்போ, அதற்குரிய சர்வசன வாக்கெடுப்போ நடைபெறுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லாத பட்சத்தில் தமிழர் சித்தித்து செயல்பட வேண்டும்.

உள்ளுராட்ச்சி தேர்தலில் சிங்கள பிரதேசங்களிலே ராஜபக்ச வென்றதினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிசேனவையோ ரணிலையோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் தமிழரை இழுக்க கூடாது.
மேலும் எதிர் வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆம் அமர்விற்கு முன், மனித உரிமை ஆணையாளர், தீர்மானம் (34/L1) பிரகாரம் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீலங்கா இன்னமும் அதன் குற்றங்களை விசாரிக்காத போக்கை எதிர்கொண்டு, அதை மாற்ற நடவடிக்கை எடுக்கும் என்ற மனப்பான்மை கொண்டுள்ளதென்று தன்னை காட்டிக்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார் (Sri Lanka has not yet demonstrated willingness to address impunity). அத்தோடு மனித உரிமை உருப்பு நாடுகள் தாமே (ஸ்ரீலங்கா) போர்குற்றவாளிகளுக்கெதிராய் வழக்குகளை (universal jurisdiction) கொண்டு வரல் வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

37ஆம் அமர்வை நோக்கி நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் ஆணையாளர் கூறியதை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கோரி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. https://www.einnews.com/pr_news/434091935/as-un-human-rights-council-meets-in-geneva-tgte-calls-for-justice-for-victims-of-sri-lankan-war-crimes ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் மன்றத்திடம் போர்க்குற்ற விசாரணைக்காக அனுப்புவதற்கு மனித உரிமை பேரவை, ஐநா பாதுகாப்பு சபைக்கு சிபாரிசு செய்வது, குற்றவாளிகளுக்கு இலக்கு வைக்கப்பட்ட தடைகள் விதிப்பது, போன்ற அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

வரும் நாட்களில் ஐ நா மனித உரிமை பேரவைக்கு ஸ்ரீலங்கா அளித்த உறுதிப்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சுயாதீனமாக இயங்கும் நிபுணர் ஆய்வு செய்து ஓர் இடைக்கால மதிப்பீடு அட்டை ஒன்றை வெளியிட இருக்கின்றனர்.

இவை யாவும் மொத்தமாக என்னத்தை குறிக்கிறதென்றால் தமிழின அழிப்புக்கு நீதி கோருவதற்கு வழி, ஓர் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (International Criminal Tribunal) அல்லது சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணை (International Criminal Court) ஒன்றே என்பதே. அதுவே தமிழரின் ஒற்று மொத்த முடிவாய் இருக்க வேண்டும்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்

ஆயுதப்போர் மெளனிக்கப்பட்டுவிட்டதென்பதனால் சுதந்திர தமிழீழத்திற்காண எங்கள் இலக்கை, இலச்சியத்தை கை விடுவோம் என்று நினைப்பது எங்கள் மண்ணும், நாம் ஓர் தேசிய இனம் என்ற அடையாளமும், எங்கள் மொழியும், பாரம்பரியமும், மரபுகளும் எங்கள் கண் முன்னே மெல்ல மெல்ல அழிந்து போவதை நாமே அனுமதிப்பதாகவே நாம் பார்க்க வேண்டும்.

எங்கள் போராட்டம் ஓர் புதிய வடிவத்தை எடுத்து, ஒற்றுமொத்த தமிழ் மக்களின் முழு பங்களிப்புடன் - புலம்பேர் தமிழர், தாயக தமிழர் இருபாலரும் ஒரு நாணயத்த்தின் இரு பக்ககங்கள் மாதிரி செயல்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கையின் படி, எங்கள் போராட்டம் அறப்போரின் விழுமியங்களை கொண்டுள்ளதாக, நாம், அரசியல் சாதுரியம், சாமர்த்தியம், ராஜதந்திரம் முதலியவற்றை கையாண்டு, அதை கொண்டு எங்கள் உரிமைகளை, தனி நாட்டின் உண்மை தன்மையை, சரத்வத்தேசத்திற்கு நியாயப்படுத்தி, அதன் மூலம் எங்கள் இலச்சியத்தை அடைய வேண்டும்.

தனி நாடு கோரிக்கையை தடை செய்யும், ஸ்ரீலங்காவின் 6 ஆம் திருத்தச் சட்டம் ஓர் மனித உரிமை மீறல் என்று எடுத்து காட்ட வேண்டும். தமிழ் அரசியல் வாதிகளும் அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து அச் சட்டத்தை நீக்குவதற்கு குரல் எழுப்ப வேண்டும். அதற்கு எதிராய் கோரிக்கை முன்வைப்பது ஸ்ரீலங்கா சட்டத்திற்கு முரணல்ல.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பல சட்டத்த்தரணிகளின் ஆதரவுடன் இவ்விடயத்தை ஐக்கிய நாடுங்கள் மனித உரிமை குழுவிடம் (UN Human Rights Committee) முன்வைத்து அதன் பரிந்துரைகளை நாடி நிற்கிறது.

இத்தோடு தாயகத்தில் ஈழத்தமிழருக்காகவும் வட கிழக்கு மக்களுக்காகவும், புலம்பேர் ஈழத்தமிழருக்காகவும் ஓர் பொதுசன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் கண்காணிப்புடன் நடத்த தமிழர்கள் தங்கள் ஒற்றுமொத்த குரலை எழுப்ப வேண்டும். ஐக்கிய நாடுகள் மன்றம் கிழக்கு தீமோரில் பொதுசன வாக்கெடுப்பிற்கு ஆதரவு அளித்தது. இதை மனதில் கொண்டு, இன அழிப்புக்கு நீதிகோரி சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அனைத்து புலம்பேர் தமிழரும் குரல் எழுப்ப வேண்டும்.

இன அழிப்புக்கு ஒரே ஒரு தீர்வு, சுதந்திர தமிழீலமொன்றே என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டும். தமிழர்கள் தான் தமிழருக்கு அதிகாரப் பலத்தை கொடுக்கக்கூடியவர். சிங்களவர் கொடுப்பார்கள் என்பது ஏமாற்றத்தில் முடியும். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் என்ற கோட்பாட்டுக்கு இணங்க செயல் படுவோம் வாருங்கள்!

உஷா ஸ்ரீஸ்கந்தராஜா

Usha Sriskantharaja
உஷா ஸ்ரீஸ்கந்தராஜா
+1-416-564-2946
email us here