புதிய சிறிலங்கா அரசு போர்க் குற்றத்துக்குத் தண்டனையின்மை எனும் கொள்கையைத் தொடர்கிறது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

2009 முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நிகழ்ந்து 16 வருடங்கள்முடிந்துவிட்டன.

COLOMBO, SRI LANKA, April 8, 2025 /EINPresswire.com/ --
புதிய சிறிலங்கா அரசு போர்க் குற்றத்துக்குத் தண்டனையின்மை எனும் கொள்கையைத் தொடர்கிறது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐநா மனித உரிமைப் பேரவையின் 58ஆம் அமர்வு ஏப்ரல் 4ஆம் நாள்முடிவடைந்தது. 2025 மார்ச்சு 3ஆம் நாள் இந்த அமர்வைத் தொடங்கிவைத்து ஐநா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் ஃபோல்கர் துர்க்(Volker Turk) பேசுகையில் "பொறுப்புக்கூறல் இல்லாத நிலைஅமைதி இல்லாத நிலைக்கு இட்டுச்செல்லும்" என கூறினார்.சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இல்லாத நிலை அமைதியின்மைக்குஇட்டுச் செல்வதோடு மட்டுமில்லாமல், அமைதிக்கு அச்சுறுத்தலாகவும்அமைகின்றது. முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பைத் தொடர்ந்துமுசுலிம்களுக்கு எதிராக நிகழ்ந்த பரவலான வன்முறையும், தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்ப்பும்இதற்குச் சான்றுகளாக உள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச குற்றங்கள் புரிந்தசிங்களக் குற்றவாளிகள் ஒருவர் கூட இது வரைகுற்றங்களுக்குப் பொறுப்பாக்கப்படவில்லை எனும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உயராணையாளர் துர்க் (Turk) தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறது. உயராணையாளர் தனதுஆரம்ப உரையில் சிறிலங்காவின் தற்போதைய புதியஆட்சியாளர்கள் “…குற்றத்துக்குத் தண்டனையின்மை என்றநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உறுதிப்பாட்டை உள்நாட்டுப்போரின் போதும் முந்தைய உள்நாட்டுக் கலகங்களின் போதும்நடைபெற்ற பெருமளவிலான உரிமை மீறல்களுக்கும்பொருந்தச் செய்ய வேண்டும். இந்தக் குற்றங்கள் முழுமையாகப்புலனாய்வு செய்யப்பட்டு, துயரப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச்செய்ய வேண்டும், குற்றவாளிகள் அவர்கள் செய்தகுற்றங்களுக்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும்.” எனகுறிப்பிட்டார்.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நிகழ்ந்து 16 வருடங்கள்முடிந்துவிட்டன. முன்னாள் ஐநா பொதுச் செயலர் பான் கி-மூன்(Ban Ki-Moon) அமைத்த சிறிலங்காவில் பொறுப்புக்கூறல்பற்றிய 2012 ஐநா வல்லுநர் குழு -– சிறிலங்காவில்மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் போர்க் குற்றங்களும்நிகழ்ந்தன என அறிக்கையளித்து 14 ஆண்டுக் காலத்துக்குமேலாயிற்று. ஆனால் இது வரை ஒருவர் கூட, நீதியின்முன் நிறுத்தப்படவில்லை. (பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்தளைப்படுத்தும் ஆணைகள் பிறப்பிக்கப் பயன்படுத்தும்தரநிலை இதுவே.)

சென்ற வாரம் பிரித்தானிய அரசு சிறிலங்கா ஆயுதப் படைகளின்முன்னாள் தலைவர் சவேந்திர சில்வாவுக்கும், முன்னாள்கடற்படைத் தளபதி வசந்த கரணகொடாவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத்ஜெயசூரியாவுக்கும் தடைகள் விதித்தது. 2023இல் கனடிய அரசுஸ்டாஃப் சார்ஜண்ட் (Staff Sergeant) சுனில் ரத்நாயகாவுக்கும், லெஃப்டினண்ட் கமாண்டர் சந்தன பிரசாத்ஹெட்டியாராய்ச்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயஇராசபட்சேக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தஇராசபட்சேக்கும் இதேபோன்ற தடைகள் விதித்தது. 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், லெஃப்டினண்ட் ஜெனரல்சவேந்திர சில்வாக்கு – “மோசமான மனிதவுரிமை மீறல்களின்காரணத்தால்” அவருக்குப் பயணத் தடை விதித்தது.

தடைவிதிப்புக்கு ஆளான இந்தத் தனியாட்கள் அனைவரும்சிறிலங்கா அரசின் அரசியல் தலைவர்களும் படைத்தலைவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்குற்றவாளிகள் சிறிலங்காவில் கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது வெளிப்படையான உண்மை.

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
X
LinkedIn

This press release can be viewed online at: https://www.einpresswire.com/article/801377059/

Disclaimer: If you have any questions regarding information in this press release please contact the company listed in the press release. Please do not contact EIN Presswire. We will be unable to assist you with your inquiry. EIN Presswire disclaims any content contained in these releases.

© 1995-2026 Newsmatics Inc. All Right Reserved.