மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார்.
பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.
ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன் அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார்.
(1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார்.
** நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி **
Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org
இணையத்தள முகவரி: www.tgte-us.org
கீச்சக முகவரி: @TGTE_PMO