There were 1,705 press releases posted in the last 24 hours and 402,155 in the last 365 days.

தேசமாய் சிந்திப்போம் நாட்டை உருவாக்குவோம் ! சிறப்புடன் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

"இவ்வமர்வில் சர்வதேச அரசியல் பிரமுகர்கள், வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு வலுச்சேர்த்திருந்தனர்"

NEW YORK, UNITED STATES OF AMERICA, December 8, 2021 /EINPresswire.com/ --

தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat - State in the Making ) என்ற தொனிப்பொருளில் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையானது, 'தேசமாய் சிந்திப்போம், நாட்டை உருவாக்குவோம்' என்ற உறுதியோடு நிறைவுகண்டது.

இரு நாள் அமர்வாக இணையவழி (டிசெம்பர்4,5) இடம்பெற்றிருந்த இவ்வமர்வில் சர்வதேச அரசியல் பிரமுகர்கள், வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கு வலுச்சேர்த்திருந்தனர்.

தொடக்க நிகழ்வின் போது, பேராசிரியர் Prof. Matt Qvortrup அவர்கள் தான் எழுதிவரும் ஒரு நாட்டை எவ்வாறு உருவாக்குவது ( How to create a state ) என்ற நூலினை அடிப்படையாக வைத்து கருத்துரையினை வழங்கியிருந்தார். பேராசிரியரின் கருத்துரைக்கு ஒத்திசைவாக தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு மணிவண்ணன் அவர்களும் State Formation தொடர்பில் கருத்துரையினை வழங்கியிருந்தார். 'தேசமாய் சிந்தித்து நாட்டை உருவாக்குவோம்' என தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்புக்கு இக்கருத்துரைகள் வலுவூட்டியிருந்ததோடு, தமிழீழ மக்களின் அரசியல் தீர்வு என்பது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழம் என்ற நாடே என்பதனை வெளிப்படுத்தி நின்றது.

கனடா ஒன்ராறியோ மாகாண உறுப்பினர் Aris Babikian, MPP அவர்கள் 'தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்' ( Ways and Means of getting recognition for Tamil Genocide ) தொடர்பில் கருத்துரையினை வழங்கயிருந்தார்.

கனேடிய நடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, MP அவர்கள் 'தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் கனடாவின் பங்கு' தொடர்பில் ( Canada's role in securing Justice for Tamils ) கருத்தரையினை வழங்கினார்.

அமெரிக்காவில் இருந்து சட்டவாளர் Steven Schneebaum அவர்கள் 'அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம்' ( Legal Battle against ban on LTTE in the US ) தொடர்பில் கருத்துரையினை வழங்கயிருந்தார்.

ஆக்கிரமிக்கப்புக்கு உள்ளாகியுள் தமிழர் தேசத்தில் அபகரிக்கப்புக்கு உள்ளாகும் தமிழர்கள் நிலங்கள் தொடர்பிலான கருத்தாடல் களத்தில் 'நில அபகரிப்புக்கள் ' தொடர்பில் Anuradha Mittal கருத்துரையினை வழங்கயிருந்தார்.

இதேவைளை அமர்வின் சிறப்பு அதிதியாக பங்கெடுத்துக் கொண்ட போகன்வீல் தேசத்தின் அதிபர் Hon James Tanis அவர்கள், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக முழுமையாக பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்சபை உறுப்பினர்களும், அரசவை உறுப்பினர்களும் இணைந்ததான கருத்தாடலைத் தொடர்ந்து முதல்நாள் அமர்வு நிறைவு கண்டது.

இரண்டாம் அமர்வின் போது, வள அறிஞர் இங்கர்சால் செல்வராஜ் அவகள் 'சமூக வலைத்தள முடக்கங்கள், எதிர்கொள்ளும் சவால்கள்' பற்றி கருத்துரையினை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து அமைச்சர்களது அறிக்கைள், உறுப்பினர்கள் கேள்வி பதில் என தேசமாய் சிந்திப்போம், நாட்டை உருவாக்குவோம் என்ற உறுதியோடு இரு நாள் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவு கண்டது.

தொடக்க நிகழ்வு - நேரஞ்சல் காணொளி :

https://youtu.be/QOU71OEtWxc

பிரமுகர்கள் உரை:

https://youtu.be/hVUBq6ndDIM
https://youtu.be/m_iVT28qTAA
https://youtu.be/k4c5SF9ohts
https://youtu.be/6zmlEnTqifI

அரசவை அமர்வு பதிவுகள் :

https://youtu.be/FX5Kr5pc7-g
https://youtu.be/u7-_V3PcV8w
https://youtu.be/BaOMfmCWpxk

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1-614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
LinkedIn

தொடக்க நிகழ்வு - நேரஞ்சல் காணொளி