There were 1,221 press releases posted in the last 24 hours and 401,121 in the last 365 days.

Tamils for Biden:திமுக தேர்தல் வெற்றியை வாழ்த்தி, ஈழத்தமிழர்களுக்கா மோடியிடம் உதவிக்கு ஜெயலலிதா போல் உழைக்க வேண்டுகிறோம்

DMK Stalin

நேர்மையான மற்றும் உலக வாழ் தமிழர்களை பெருமைப்படுத்தும் தமிழ் நாட்டு ஆட்சி அமைய எமது வாழ்த்துக்கள்!

இந்திய ஆயுதப்படையை அனுப்புவது பற்றி சிந்தித்து மோடியின் அரசை ஊக்கிவிக்க வேண்டும். தமிழர்களுக்கு பாதுகாப்பான பாதுகாக்கப்பட்ட தாயகத்தை வழங்குவது புவிசார் அரசியலின் கீழ் செய்ய வேண்டியது”
— இயக்குனர், பைடனுக்கான தமிழர்கள்
NEW YORK, NEW YORK, USA, May 4, 2021 /EINPresswire.com/ -- நாங்கள் அமெரிக்காவில் வாழும் ஈழத்திலிருந்து வந்த தமிழ் புலம்பெயர்ந்தோர்கள் , திமுக வின் வெற்றிகரமான 5 ஆண்டு ஆட்சிக்கு, அதாவது நேர்மையான மற்றும் உலக வாழ் தமிழர்களை பெருமைப்படுத்தும் தமிழ் நாட்டு ஆட்சி அமைய எமது வாழ்த்துக்கள்.

திமுக வினர் கஷ்டப்படுகின்ற ஈழம் தமிழர்கள் மீது கவனம் செலுத்தி மத்திய அரசிடம் தங்கள் கவனத்தை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கீழ் உள்ளவற்றை நிறைவேற்ற வேண்டும்.

1. ஈழத்தில் தமிழ் வாக்கெடுப்பு, இது திமுக வின் தேர்தல் உறுதி.

2. கச்ச தீவை இலங்கைக்கு சட்டவிரோதமாக இந்திரா காந்தி கொடுத்ததை, தமிழ் நாடு திரும்பப் பெறுங்கள். இல்லாவிடில் மிக விரைவில் கச்ச தீவு விரைவில் சீன காலனியாக மாறும்.

3. வடக்கில் மூன்று தமிழ் தீவுகள் சீனர்களால் கைப்பற்றப்பட்டன. இந்த தீவுகள் தமிழ்நாட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
இது 99 வருட குத்தகைக்கு அல்லது சீனர்களுக்கு விற்கப்பட்டதா என்று யாருக்கும் தெரியாது. ஈழ தமிழர்களின் தாயகத்திற்கு சீனப் படையெடுப்பைத் தடுக்க, இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும்.

4. வடகிழக்கு இலங்கைக்கு, அதாவது, தமிழீழத்திற்கு சீனப் படையெடுப்பைத் தடுக்க தமிழ் நாடு, தங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்.

5. சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் தமிழர்களின் இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்கவும், தமிழர்களின் நிலத்தை சிங்களவர் சூறையாடுவதை தவிர்க்கவும், இந்து கோவில்களை அழித்து, சிங்கள புத்த மத சின்னங்களுடன் இந்து கோவில்களை மாற்றுவது, தமிழ் இளைஞர்களைக் கொல்வது, ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தால் தமிழ் இளைஞர்கள் போதைப்பொருளை நோக்கி வழிநடத்தப்பட்டுள்ளனர்.

6. ஆண் பெண், இளம் மற்றும் வயதான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகிவருகிறார்கள்.

சிங்களவரின் மற்றும் தொடர்ச்சியாக ஒடுக்குமுறை மற்றும் தமிழர்களை இலங்கை தீவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துவது போன்றவற் ரை தடுப்பதற்கு, இலங்கைக்கு வெளிநாட்டு படையெடுப்பே சிறந்த வழி.

தமிழர்களைக் காப்பாற்ற இந்திய ஆயுதப்படையை அனுப்புவது பற்றி தமிழ் நாடு சிந்தித்து மோடியின் அரசை ஊக்கிவிக்க வேண்டும். தமிழர்களுக்கு பாதுகாப்பான பாதுகாக்கப்பட்ட தாயகத்தை வழங்குவது தற்போதைய புவிசார் அரசியலின் கீழ் செய்ய வேண்டியது சரியான விடயம்.

ஒரு தமிழீழத்தை வழங்குவது அல்லது தமிழருக்கு இறையாண்மை வழங்குவது, தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்கும் என்று இந்தியா நினைத்தால் அது ஒரு அபத்தமான சிந்தனை. பெரிய நாடான இந்தியாவின் ஒரு பகுதியாக தமிழ் நாடு இருப்பதால் தமிழ் நாடு பயனடைகிறது . தமிழ் நாட்டு தமிழர்களுக்கு அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளும் உள்ளன. அவர்களுக்கு இறையாண்மையும் உள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இறையாண்மை கிடைத்தால், தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள்.

ஒரே இனங்கள் அனைத்தும் தனித்தனியாக வாழ்கின்றன, இதற்க்கு உதாரணமாக:
கொசோவாவின் அல்பேனியர்கள் மற்றும் அல்பேனியாவின் அல்பேனியர்கள், மேற்கு வங்காளத்தின் வங்காளிகள் மற்றும் பங்களா தேசத்தின் வங்காளிகள், போஸ்னிய செர்பியர்கள் மற்றும் செர்பியா செர்பியர்கள், போஸ்னிய குரோஷியர்கள் மற்றும் குரோஷியாவின் குரோஷியர்கள் ஆகியோரின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்ட, ஒரே இனங்கள் அனைத்தும் தனித்தனியாக வாழ்கின்றன. அவர்கள் ஒருபோதும் ஒரே நாடாக வாழ முயற்சிக்கவில்லை.

இலங்கையில் உள்ள தமிழர்கள் எந்தவொரு இந்திய உடன்படிக்கையையும் மீற மாட்டார்கள், தவிர நாம் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரமாக வாழ விரும்புகிறோம்.

ஆனால் பிற பெரிய நாடுகளின் எதிர்கால படையெடுப்பிலிருந்து தமிழர்களுக்கு நீண்ட காலமாக இந்தியாவின் பாதுகாப்பு தேவை.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இறையாண்மை வழங்குவதன் மூலம் இந்தியா எவ்வாறு பாதுகாக்கப்படும் என்று திமுக மத்திய அரசுக்கு விளக்கமளிக்க வேண்டும்,

தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்ற ஈழத்தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்க்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு உதாரணம்.

நன்றி,
பைடனுக்கான தமிழர்கள்

Director
Tamils for Biden
+1 914-980-1811
email us here
Visit us on social media:
Facebook
Twitter