There were 0 press releases posted in the last 24 hours and 400,917 in the last 365 days.

தமிழர்கள் தங்கள் ஜனாதிபதி தேர்தல் வாக்குகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது

இந்திய மின்னணு வாக்குகளில், எலெக்ட்ரானிக்ஸ் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வழங்கப்பட்ட "மேலே எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்ற தெரிவு

இலங்கையின் தமிழர் வாக்களிப்பு

NEW YORK, NEW YORK, USA, October 18, 2019 /EINPresswire.com/ -- வரவிருக்கும் இந்த இலங்கையின் 2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் பார்ப்போம்:

1. 145, 000 க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றவருக்கும் போர்க்குற்றவாளிக்கும் தமிழர்கள் வாக்களிக்க முடியும்.

2. தமிழர்களின் தாயகத்தில் புத்த கோவில்களைக் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கும், தமிழ் தாயகத்தில் சிங்களவர்களை குடியமர்த்தி கொண்டிருக்கும் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்க முடியும்.

3. தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்கள் ஒரு தமிழ் தேசியத்திற்கு வாக்களிக்க
முடியும்.

4. தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்கவும் முடியும். ஆனால் அது தமிழர்களின் எந்த நோக்கத்தை கருதம் என்பது ஒரு கேள்வியாகும்.

இந்தியாவில், வாக்குச்சீட்டில், கடைசி தேர்வு “மேலே உள்ள அனைத்து வேட்பாளர்களை நான் விரும்பவில்லை”, என்றுள்ளது. இது தேர்தல் புறக்கணிப்பு என்பதையே கருதும்.. ஆனால் இலங்கையில், வாக்குச்சீட்டில், புறக்கணிப்புக்கு புள்ளடி போட இடம் இல்லை.

எனவே தேர்தல் புறக்கணிப்பு என்பது இரண்டு கருத்தை கொண்டது. தமிழர்கள் வாக்களிக்க சோம்பேறிகள் அல்லது தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்கள் கவலைப்படுவதில்லை என்று கருதலாம்.

எனவே, தமிழர்கள் தங்களுக்கு போர்க்குற்றவாளி (தமிழ் கொலையாளி), வடகிழக்கில் சிங்கள குடியேற்றத்தையும் புத்த கோவில்கள் கட்டுபவர்களையும் தேர்ந்தெடுப்பதா அல்லது தமிழ் தேசியம் தேவை என்பதால் ஒரு தமிழருக்கு வாக்கு போடுவதா என்று சிந்திக்க வேண்டும்.


வரவிருக்கும் இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான எங்கள் சிந்தனையையும் காரணங்களையும் விரைவில் உங்களுடன் பகிர்வோம் .

நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்தி

எங்கள் முந்தைய பயனுள்ள செய்தி வெளியீட்டு இணைப்பு:

[தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்](http://www.tamildiasporanews.com/as-far-as-the-tamils-%e2%80%8b%e2%80%8bare-concerned-sajith-is-another-sonia-gandhi/)

[2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்கு பெற த.தே.கூ தமிழர்களை வெருட்டுகிறது](http://www.tamildiasporanews.com/tna-using-intimidation-tactics-power-the-tamils-to-vote-for-sajith-premadasa/)

[இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்](http://www.tamildiasporanews.com/tamils-%e2%80%8b%e2%80%8bin-the-sri-lankan-presidential-election-must-reject-the-tna-directive-2/)

[2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை : ஈழத்தமிழர்கள்](http://www.tamildiasporanews.com/tamils-%e2%80%8b%e2%80%8bneed-tamil-presidential-candidate-in-2019-presidential-election-eelam-tamils/)

Editor
Tamil Diaspora News
+1 914-980-1811
email us here