எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம்-காண்டீபன்

Kandeepan

Give us a chance and we will make it happen: Kandeepan

6வது திருத்தச்சட்டம் பிழையானது அது ஒடுக்குமுறைச் சட்டம் என்று வெளிநாடுகளே கூறிவிட்டது. விடுதலைப்போராட்டம் மௌனிக்கபட்டு 10 வருடங்கள் கடந்த நிலையில் பதவியில் இருந்த கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை.”
— காண்டீபன்

NEW YORK, NEW YORK, USA, May 28, 2020 /EINPresswire.com/ -- தமிழர்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க ஆயுதப்படை பாதுகாப்பு தேவையென்றால், 70 வருடங்களாக சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்களை பாதுகாக்க ஆயுதம் தூக்கிய பிரபாகரன் தேவைப்பட்டார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த நான்கரைவருடங்களாக மைத்திரிபால சிறிசேனாவை நெல்சன்மண்டேலாகவும், மகாத்மா காந்தியாகவும் சொல்லிக்கொண்டு இருந்தது, ஒரு இடைக்கால வரைவையும் கொண்டுவந்திருந்தது. நல்லிணக்க அரசுடன் கைகோத்திரிந்த இந்த காலத்தில் அரசியல் தீர்வையோ, அரசியல் கைதிகள் விடுவிப்பு போன்று எதனையும் சாதிக்கவில்லை. சகல அதிகாரங்களையும் அடையக் கூடிய இடத்தில் இருந்தும் எதனையும் அடையவில்லை.

மகிந்தவை சந்தித்தது பற்றி கூட்டமைப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக பேசியதாக அறிக்கை விட்டுள்ளது. கடந்த ஆண்டுகளாக இணக்க அரசியல் செய்தபோதும் தீர்வை காணமுடியதவர்கள் இன்று மீண்டும் மகிந்தவிடம் செல்வதன் நோக்கம் மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகள் கோத்தய ராஜபக்ச அரசை காப்பாற்றி, குற்றவியல் நீதிமன்றில் இருந்தும் காப்பாற்றுவதற்கே ஆகும்

சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக்கிய சிங்கள தலைமை ஐக்கிய நாடுகள் சபையில் போய் சொல்லுகின்றது தமிழர் ஒருவருக்கு எதிர்க்கட்சி தலைமை கொடுத்துள்ளோம் இதன் மூலம் நல்லிணக்கம் ஏற்படுத்தி இருக்கின்றோம் என்று மங்கள சமரவீர கூறினார்.

நாங்கள் ஆசனங்களுக்கு ஆசைப்பட்டவர்களாக இருந்திருந்தால் கடந்த பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்திருந்தாலே ஆசனங்களை பெற்றிருக்கலாம். நாம் நாடாளுமன்ற கதிரைகளை சூடாக்கும் அரசியலை எமது மக்களுக்கு என்றுமே செய்ய தயாராக இல்லை.

அனைத்துலக சாசனங்களில் கைச்சாத்திட்ட சிங்கள அரசு கொத்துகுண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்து. ஆனால் சுமந்திரனோ இனப்படுகொலை செய்யவில்லை என்று வாதாடுகின்றார்.

ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்திலேயே குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுதலை என்பதே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக மிருசுவிலில் படுகொலை செய்து நீதி மன்றில் மரணதண்டனை கொடுக்கப்பட்ட இராணுவ அதிகாரி கோத்தய பாய ராஜபக்கசாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரசுக்கு ஸ்ரேற் டிப்பாட்மென் (State department) அனுப்பிவைத்த அறிக்கையில் 2009 தை தொடக்கம், மே வரையாக நடைபெற்ற சம்பங்களை பட்டியலிட்டதோடு, அங்கு நடைபெற்ற படுகொலைக்கு சவேந்திர சில்வா தான் பொறுப்பாளர் என்ற தரவுகளை கொடுத்திருந்தது. இராணுவத்தளபதியாக இருந்து பல குற்றங்களை செய்துள்ளார். எனவே இவருக்கு பயணத்தடை செய்கின்றோம் என்று காங்கிரஸ் தற்போது தெரிவித்துள்ளது.

இனப்படுகொலை செய்த அரசை சர்வதேச நீதி மன்றில் நிறுத்து இருந்தால், அரசியல் தீர்வும், கைதிகள் விடுதலையும் இலகுவாகிவிடும். ஆனால் கூட்மைப்பு சிங்கள அரசுடன் கைகோத்து கொண்டு கால இழுத்தடிப்பையே செய்கின்றது. இதனால் காணாமாலக்கபட்டோரின் உறவுகள் பல இன்று இறந்து போய்விட்டனர். இதனால் நேரடிச்சாட்சியங்கள் இல்லாமல் போய்விட்டது. இந் நிலை தொடர்ந்தால் சாட்சிகள் நிலமை கேள்விக்குறி ஆகக் கூடிய கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, எனவே எங்களுடைய மக்களுக்கு இழைக்கபட்ட அநீதியை பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றை குரலில் கூறினால் சர்வதேசம் அதனை செவிசாய்க்கும். அத்துடன் அந்த உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்கு தேவையென்றால், எமது அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், அரசியல் தீர்வை பெறுதல் போன்றவற்றினை நிபந்தனை வைத்து அரசுக்கு அழுத்தினை கொடுப்போம்.

ஆயுத வன்முறையை தனக்கு பிடிக்காது என்று கூறும் சுமந்திரன், தனக்கு பாதுகாப்பில்லை என்று ஆயுதப்படையை தனது பாதுகாப்பிற்கு வைத்துள்ளார். சொந்த மக்களிடம்
செல்லவே தனக்கு உயர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதற்காக ஆயுதப்படை பாதுகாப்பை வைத்திருக்கும் சுமந்திரன்.

சுமந்திரனுக்கே பாதுகாப்புக்கு ஆயுதப்படை வேண்டுமென்றால் சுமார் 70 வருடங்கள் சிங்களவர்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆயுதம் தூக்கிய பிரபாகரன் தேவைப்பட்டார் சிங்களவர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்க.

ஆறாவது திருத்தச்சட்டம் பிழையானது அது ஒடுக்குமுறைச் சட்டம் என்று வெளிநாடுகளே கூறிவிட்டது. விடுதலைப்போராட்டம் மௌனிக்கபட்டு பத்து வருடங்கள் கடந்த நிலையில் பதவியில் இருந்த கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதனையும் செய்யவில்லை. எனவே எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம் என்று மக்களிடம் வேண்டி நிற்கின்றோம் என்றார் திரு காண்டீபன் அவர்கள்.

Press Release Link http://www.tamildiasporanews.com/give-us-a-chance-and-we-will-make-it-happen-kandeepan/
Video Link: https://www.youtube.com/watch?v=ER7ECU0sBps&feature=youtu.be

Editor
Tamil Diaspora News
+1 914-713-4440
email us here
Visit us on social media:
Facebook
Twitter

WATCH NOW: எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுங்கள் நாங்கள் செய்து காண்பிக்கின்றோம்-காண்டீபன் at https://www.youtube.com/watch?v=ER7ECU0sBps&feature=youtu.be

This press release can be viewed online at: https://www.einpresswire.com/article/518101530/

Disclaimer: If you have any questions regarding information in this press release please contact the company listed in the press release. Please do not contact EIN Presswire. We will be unable to assist you with your inquiry. EIN Presswire disclaims any content contained in these releases.

© 1995-2022 Newsmatics Inc. All Right Reserved.